Viral Video : நீர்வீழ்ச்சியின் விளிம்பில் உயிருக்கு போராடிய நபர்.. கையிறு கொண்டு காப்பாற்றிய பொதுமக்கள்.. பகீர் வீடியோ!
An Young Man Stuck Into Waterfall Edge | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியின் விளிம்பில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், அவ்வப்போது பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், நீர் நிலைகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் தண்ணீரில் சிக்கி தவிப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைராகி வருகிறது. அந்த வகையில், நீர் வீழ்ச்சியின் உச்சியில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நபரை அங்கிருக்கும் பொதுமக்கள் சிலர் மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீர் வீழ்ச்சியின் உச்சியில் உயிருக்கு போராடிய நபர்
ஏரி, குளம், நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பொழுதுபோக்கு, நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்காக இத்தகைய இடங்களை அவர்கள் தேர்வு செய்கின்றனர். இவ்வாறு நீர்நிலைகளுக்கு செல்வது மகிழ்ச்சியை தருவது மட்டுமன்றி ஆபத்தை கொடுக்கும். நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் இருப்பது உயிர் பலியை கூட ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த நிலையில், நீர் வீழ்ச்சியில் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : அத்தை மகனை காதல் திருமணம் செய்த பெண்.. இளம் ஜோடியை மாடுபோல் ஏர் உழவ வைத்த கிராம மக்கள்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கலு நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அவர் நீர்வீழ்ச்சியின் உச்சியில் உள்ள பாறை மீது ஏறி நின்று மற்றொடு பாறைக்கு தாவ முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழுந்த அவர், நீர்வீழ்ச்சியின் விளிம்பில் சிக்கிக்கொண்டுள்ளார். அதாவது, தண்ணீர் கொட்டும் இடத்தில் சிக்கிக்கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கிருந்த பொதுமக்கள் கயிறு கொண்டு அவரை காப்பாற்றியுள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியின் விளிம்பில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். சற்று தவறினாலும் பள்ளத்தில் விழுந்து உயிரே போய்விடும் அபாயத்தில் உள்ளார். இந்த நிலையில், நீர்வீழ்ச்சியின் பக்கவாட்டில் உள்ள பாறைகளின் மீது நின்றுக்கொண்டு சிலர் அந்த நபருக்கு கயிறு கொடுத்து மீட்க முயற்சி செய்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நீர் நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் பலரும் அந்த வீடியோவின் கீழ் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.