Viral Video : தாஜ் மஹாலுக்கு அருகில் இப்படியா?.. முகம் சுளித்த வெளிநாட்டவர்கள்!
Polish Tourist Exposed Garbage Near Taj Mahal | தாஜ் மஹாலை மிகவும் அழகான இடமாக தான் பலர் பாத்திருப்பர். இந்த நிலையில், தாஜ் மஹாலுக்கு அருகே துர்நாற்றம் வீசும் கழிவுநீர் ஓடுவதையும், குப்பை கொட்டப்பட்டுள்ளதையும் போலிஷ் சுற்றுலா பயணிகள் சிலர் வீடியோ பதிவு செய்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

உலகின் 7 அதிசயங்களின் ஒன்றாக உள்ளது தான் தாஜ் மஹால் (Taj Mahal) . இது இத்தகைய சிறப்பு வாய்ந்ததாக உள்ள நிலையில், உலகம் எங்கிலும் உள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் தாஜ் மஹாலுக்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், தாஜ் மஹாலை பார்க்க வந்த போலிஷ் சுற்றுலா பயணிகள் இருவர் தாஜ் மஹாலுக்கு அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அவர்களின் இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தாஜ் மஹாலுக்கு அருகே கொட்டப்பட்ட குப்பை
தாஜ் மஹால் மிகவும் அழகான சுற்றுலா தளங்களில் ஒன்றாக உள்ளது. அதன் கலை அழகை காண்பதற்காகவே ஏராளமான பொதுமக்கள் நாள்தோறும் அங்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில், தாக் மஹாலுக்கு மிக அருகில் கழிவுநீர் ஓடுவதையும் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளையும் வீடியோ பதிவு செய்த சுற்றுலா பயணிகள் சிலர் அந்த வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அது தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் தாஜ் மஹாலுக்கு அருகே கொட்டப்பட்டுள்ள குப்பை கிடங்கில் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் துணியை வைத்து தனது மூக்கை மூடிக்கொண்டு உள்ளார். அப்போது வீடியோ பதிவு செய்யும் நபர் தாஜ் மஹால் எங்குள்ளது என கேட்கிறார். அதற்கு அவரது முன்னாள் நின்றுக்கொண்டு இருக்கும் இளம் பெண் தாஜ் மஹாலை நோக்கி கை காட்டுகிறார். பிறகு கேமராவை குப்பை பக்கம் திருப்பி அந்த நபர், இதுதான் உண்மையான தாஜ் மஹால் என்று கூறுகிறார். மேலும் அந்த இடம் சென்னையை விட மிகவும் மோசமாக துர்நாற்றம் வீசுவதாக அந்த பெண் கூறுகிறார். அப்போது அவர்களில் ஒருவர் வாந்தி எடுக்க முயற்சி செய்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வீடியோ குறித்து பதிவிட்ட சுற்றுலா பயணிகள்
இந்த வீடியோ குறித்து பதிவிட்ட அந்த சுற்றுலா பயணிகள், இந்த வீடியோ தாஜ் மஹாலின் பின்புறம் எவ்வாறு உள்ளது என்பதை காட்டுவதற்காக பதிவு செய்யப்பட்டது. இந்தியா ஒரு சிறந்த நாடு என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உலகின் இந்த அற்புதமான பகுதியை நாங்கள் வெறுக்க விரும்பவில்லை. இங்கு நிறைய சுத்தமான மற்றும் அழகான இடங்கள் உள்ளன. இந்தியாவின் சிறந்த பகுதிகள் குறித்த வீடியோக்களை விரைவில் வெளியிடுவோம் என்றும் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.