Viral Video : இரட்டையர்களுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்.. விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ!
Thailand Twin Marriage | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான மற்றும் வியப்பூட்டும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இரட்டை சிறுவர்களுக்கு திருமணம் நடத்தப்படும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தாய்லாந்தில் (Thailand) குடும்பத்தினர் தங்களது இரட்டையர்களுக்கு திருமணம் (Twin Marrigae) செய்து வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. தாய்லாந்து வழக்கப்படி ஆண், பெண் இரட்டையர்களாக பிறந்தார்கள் என்றால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் ஆண்டு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், 4 வயதாகும் இந்த சிறுவர்களுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரட்டையர்களுக்கு திருமணம் செய்து வைத்த குடும்பத்தினர்
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் மிகவும் வித்தியாசமான வழக்கங்கள் பின்பற்றப்படும். ஒரே நாட்டிலே வெவ்வேறு பகுதிகள் மற்றும் வெவ்வேரு பிரிவுகள் மிகவும் வித்தியாசமான கலாச்சாரத்தை பின்பற்றும். அந்த வகையில் தாய்லாந்தில் இரட்டையர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. அவ்வாறு 4 வயது இரட்டையர்கள் இருவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : வீட்டில் இருந்து தப்பியோடிய வளர்ப்பு சிங்கம்.. பொதுமக்களை தாக்கியதால் பரபரப்பு!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Thai family holds “wedding” for twin children
May the twins grow up with all the blessings this symbolic ceremony hopes to bring. 🍀✨ pic.twitter.com/pNUSzc4Hop
— MustShareNews (@MustShareNews) July 4, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் நான்கு வயதுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறுகிறது. அவர்களுக்கு தாய்லாந்தின் முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
தாய்லாந்தின் பாரம்பரிய வழக்கம்
குடும்பத்தில் இரட்டையராக பிறக்கும் குழந்தைகள் ஆண் மற்றும் பெண் ஆக இருந்தால், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தாய்லாந்தில் பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அவ்வாறு ஆண் மற்றும் பெண்ணாக பிறக்கும் இரட்டையர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக பிறந்திருப்பார்கள் என்றும், அவர்களுக்கு விரைவில் திருமணம் செய்யாவிட்டால் அது துரதிஷ்ட வசமாக மாறிவிடும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே அந்த இரட்டையர்களுக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஒரே வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு திருமணம் செய்வது மிகவும் அநாகரிகமான ஒன்றாக உள்ளது என்றும், குழந்தைகளை இத்தகைய செயல்களை செய்ய வைப்பது அவர்கள் பெரியவரகள் ஆனதும் அவர்களின் மனதை பாதிக்க கூடியதாக மாறிவிடும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.