Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : வீட்டில் இருந்து தப்பியோடிய வளர்ப்பு சிங்கம்.. பொதுமக்களை தாக்கியதால் பரபரப்பு!

Pet Lion Escapes From House | பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் வீட்டில் வளர்த்த சிங்கம் தப்பித்து ஓடிய நிலையில், சாலையில் சென்ற பொதுமக்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Viral Video : வீட்டில் இருந்து தப்பியோடிய வளர்ப்பு சிங்கம்.. பொதுமக்களை தாக்கியதால் பரபரப்பு!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Published: 06 Jul 2025 14:20 PM

பாகிஸ்தானின் (Pakistan) லாகூர் (Lahore) பகுதியில் வீட்டில் இருந்து தப்பியோடிய வளர்ப்பு சிங்கம் சாலையில் சென்ற பெண் மற்றும் இரண்டு குழந்தைகளை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து வரும் இணையவாசிகள், சிங்கத்தை அஜாக்கரதையாக கையாண்ட அந்த குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வீட்டில் இருந்து தப்பியோடிய வளர்ப்பு சிங்கம்

பொதுவாக வீடுகளில் நாய், பூனை, குருவி, மீன்கள் உள்ளிட்டவற்றை செல்லப்பிராணிகளாக வளர்ப்பர். மற்ற எந்த விலங்குகளை வீட்டில் வளர்த்தாலும் அதற்கு அரசிடம் உரிய அனுமதி வாங்க வேண்டும். காரணம், அவற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது ஒரு பக்கம், அவற்றுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பது ஒரு பக்கம். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட சிங்கம் ஒன்று வீட்டில் இருந்து தப்பிச்சென்று சாலையில் சென்ற பொதுமக்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் சென்றவர்களை தாக்கிய சிங்கம்

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் வீட்டில் இருந்து வெளியேறும் சிங்கம் ஒன்று, கீழே குதித்து சாலையில் ஓடுகிறது. அதனை கண்டு அந்த சாலையில் சென்றுக்கொண்டு இருந்த பெண் மற்றும் சிறுவர்கள் ஓட தொடங்கிய நிலையில், சிங்கம் அந்த பெண்ணை தாக்க தொடங்குகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடையும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். இதற்கிடையே வீட்டில் இருந்து ஓடி வரும் சிங்கத்தின் உரிமையாளர்கள் அதனை தாக்குகின்றனர். உடனே அந்த சிங்கம் அங்கிருந்து வேகமாக ஓடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிங்கங்களை வீட்டில் வளர்ப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என ஒருவர் பதிவிட்டுள்ளார். இத்தகைய அலட்சியமான முறையில் சிங்கம் வளர்த்த உரிமையாளர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று ஒருவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.