பள்ளியில் இருந்து தப்பி ஓடிய சிறுவன்.. விரட்டி சென்று பிடித்த ஆசிரியை.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
Little boy runs from School in Arunachal Pradesh | அருணாச்சல பிரதேசத்தில் பள்ளியில் இருந்து பாதியிலே தப்பித்து ஓடிய சிறுவனை அவரது ஆசிரியர் பிடித்து, மீண்டும் பள்ளிக்கு வரும்படி அழைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த வீடியோ குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி செல்வது மிகவும் முக்கியமானதாக இருந்தாலும், பெரும்பாலான குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வதில் விருப்பம் இருக்காது. இருப்பினும் பெற்றோரின் நிர்பந்தத்தால் அவர்கள் பள்ளிக்கு செல்வார்கள். சில சமயங்களில் சிறுவர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பமில்லை என அழுவதும் உண்டு. அந்தகைய வீடியோ ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பள்ளியில் இருக்க விருப்பமில்லாத சிறுவன் ஒருவன் தனது பையை எடுத்துக்கொண்டு பள்ளியில் இருந்து பாதியிலே ஓடும் வீடியோ தான் அது. இந்த வீடியோ வேகமாக வைரலாகி வரும் நிலையில், இணையத்தில் இருக்கும் மிக அழகான வீடியோ இதுதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பள்ளியில் இருந்து பாதியிலே தப்பித்து ஓடிய சிறுவன்
குழந்தைகளை பள்ளியில் சேர்த்த புதிதில் அவர்களுக்கு பள்ளிக்கு செல்ல துளியும் விருப்பம் இருக்காது. இதன் காரணமாக பள்ளி செல்ல மாட்டேன் என அடம் பிடிப்பது, பள்ளியில் விட்டதும் அழ தொடங்குவது உள்ளிட்ட செயல்களை செய்வர். அந்த வகையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் இருந்து சிறுவன் தப்பித்து சென்றுள்ளார். அதனை பார்த்த சிறுவனின் ஆசிரியர் , சிறுவனை ஓடிச் சென்று பிடித்துள்ளார். இந்த வீடியோவை அந்த ஆசிரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுவன் ஒருவர் தனது பையை எடுத்துக்கொண்டு பள்ளியில் இருந்து பாதியில் ஓடுகிறார். அதனை பார்த்த ஆசிரியர் சிறுவனர் பின்தொடர்ந்து ஓடுகிறார். அதனை பார்த்ததும் சிறுவன் வேகமாக ஓட தொடங்குகிறார். ஆனால், எப்படியோ ஆசிரியர் அவரை பிடித்து விடுகிறார். பிடிபட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த அந்த சிறுவன் சத்தமாக அழ தொடங்குகிறார். ஆசிரியர் எவ்வளவு சமாதானம் செய்தும் அந்த சிறுவன் அழுகையை நிறுத்தவில்லை. ஆசிரியர் உணவு பொருட்களை கொடுக்கிறார் அப்போதும் அவர் பள்ளிக்கு வர மறுக்கிறார். ஒரு கட்டத்தில் தரையில் அமர்ந்து அந்த சிறுவன் அழ தொடங்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆசிரியர் சோனம், ஓவ்வொரு ஆசிரியரும் எதிர்கொள்ளும் பெரிய பிரச்னை இதுதான் என குறிப்பிட்டுள்ளார்.