AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : Dream Flight.. பெற்றோருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விமான பணிப்பெண்!

Flight Attendant Meets Parents on Her Flight | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் விமான பணிப்பெண் ஒருவர், தனது பெற்றோருடன் பணிப்பெண்ணாக முதல் முறை பயணம் செய்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Viral Video : Dream Flight.. பெற்றோருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விமான பணிப்பெண்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jun 2025 16:01 PM IST

விமானத்தில் பயணம் செய்வது சிலருக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரலாம். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் தான் விமான பணிப்பெண்ணாக பயணம் செய்த விமானத்தில், தனது பெற்றோர் பயணம் செய்ததை தனது “Dream Flight” என கூறி அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் இதுதான் வாழ்க்கையின் மிக சிறப்பான தருணம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெற்றோருடன் விமானத்தில் பயணம் செய்த விமான பணிப்பெண்

நாள்தோறும் விமானத்தில் பயணம் செய்யும் விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு அவர்களது குடும்பத்துடன் இருக்க நேரம் கிடைக்காது. இத்தகைய சூழலில் விமானத்தில் பயணித்துக்கொண்டு இருக்கும்போது அதே விமானத்தில் பெற்றோரும் பயணம் செய்தால் எப்படி இருக்கும். அந்த மகிழ்ச்சியை வார்த்தையில் சொல்ல முடியாது அல்லவா. பிரமிதா என்ற விமான பணிப்பெண்ணுக்கு அத்தகைய ஒரு சுவாரஸ்ய சம்பவம் தான் நடைபெற்றுள்ளது. அது குறித்து அவர் பதிவிட்டுள்ள வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் விமான பணிப்பெண்ணின் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Parmita Roy (@ms.parmita)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் விமான பணிப்பெண் ஒருவர் பயணிகளை வரவேற்பதற்காக விமானத்தின் வாசலில் நின்றுக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரின் தாய் வருகிறார். அதனை கண்டு மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகும் அவர், அவரது தாயின் காலில் விழுகிறார். அதனை தொடர்ந்து அவரது தந்தை வருகிறார். அவரது காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். பின்னர் அவர்கள் எங்கு அமர வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.

பெற்றோர்கள் தான் விமான பணிப்பெண்ணாக சென்ற விமாத்தில் சென்றது, விமான பணிப்பெண்ணை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமன்றி, அது அவரது குடும்பத்தினரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே விமானத்திற்குள் நுழையும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இதுதான் வாழ்க்கையின் சிறப்பான தருணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us