AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : சிறுநீரால் கண்களை கழுவிய பெண்.. இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

Woman Rinses Eyes with Urine | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பூனேவை சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரில் கண்களை கழுவும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த வீடியோவுக்கு மருத்துவர் ஒருவர் கணடனம் தெரிவித்துள்ளார்.

Viral Video : சிறுநீரால் கண்களை கழுவிய பெண்.. இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Jun 2025 15:00 PM IST

சமூக ஊடகங்களில் உதவியால் உலகை சுற்றி ஏதேனும் அசாதாரனமான மற்றும் ஆச்சர்யமான விஷயங்கள் நடந்தால் அது மிக விரைவில் உலகிற்கு தெரிய வந்துவிடும். அந்த வகையில், பெண் ஒருவர் சிறுநீரால் கண்களை கழுவி பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை அந்த பெண் இணையத்தில் பகிர்ந்த நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த பெண் பதிவிட்டுள்ள வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிறுநீரால் கண்களை கழுவிய பெண்

பூனேவை சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரால் கண்களை கழுவியது குறித்து தனது சமூக வளைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், சிறுநீர் மூலம் கண்களை எப்படி கழுவுவது என்பது குறித்து விளக்கும் அந்த பெண், அது மிகவும் சிறந்த முறை என கூறுகிறார். அது குறித்து அந்த வீடியோவில் பதிவிட்டுள்ள அவர், அதிகாலையில் சிறுநீர் மூலம் கண்களை கழுவுவதால் பல்வேறு நன்மைகளை பெற்லாம் என கூறியுள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம் கண்களில் ஈரப்பதம் இல்லாமல் போவது, கண் எரிச்சல் மற்றும் கண்கள் சிவப்பாக மாறுவது ஆகியவற்றை தவிர்க்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கிய நிலையில்,  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்த பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை நீக்கம் செய்துள்ளார். இருப்பினும் அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்த பலரும் அது குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மருத்துவர் ஒருவர் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

வைரல் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்

இந்த வீடியோ குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மருத்துவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், உங்கள் கண்களில் சிறுநீரை பயன்படுத்தாதீர்கள். அவை ஆபத்தானவை. சிலர் இத்தகைய செயல்களை செய்வது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us