AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : வகுப்பறையில் பாடம் நடத்தாமல் மேஜை மீது கால் வைத்து தூங்கிய ஆசிரியர்.. வைரல் வீடியோ!

Teacher Sleeping in Classroom | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு விதமான வீடியோ வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் தூங்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Viral Video : வகுப்பறையில் பாடம் நடத்தாமல் மேஜை மீது கால் வைத்து தூங்கிய ஆசிரியர்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Jun 2025 16:44 PM IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அவ்வாறு இணையத்தில் வெளியாகி வைரலாகும் பெரும்பாலான வீடியோக்கள் பொழுதுபோக்கை மையமாக கொண்டு இருக்கும். ஆனால், சில வீடியோக்கள் தவறுகள் மற்றும் குற்ற சம்பவங்களை உலகிற்கு வெளியே கொண்டுவரும் கருவிகளாக பயன்படும். அந்த வகையில், பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்துக்கொண்டு தூங்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

வகுப்பறையில் பாடம் நடத்தாமல் தூங்கிய ஆசிரியர்

மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் அதிக சம்பளத்துடன் ஆசிரியர்களை அரசு பணியமர்த்துகிறது. இதேபோல தனியார் பள்ளிகளும் தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்துகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுக்கு நல்ல, தரமான கல்வியை வழங்க வேண்டு என பணியாற்றும் நிலையில், சிலர் மெத்தனத்துடன் பணியாற்றுகின்றனர்.

ஆசிரியர்கள் பள்ளிக்கு மது குடித்து விட்டு வருவது, வகுப்பறையில் தூங்குவது, பாடம் நடத்தாமல் இருப்பது, மாணவர்களை தங்களின்  தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் மேஜை மீது காலை வைத்து தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேஜை மீது காலை வைத்து தூங்கிய ஆசிரியர்

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சீறுடை அணிந்த சில மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர் ஒருவர் மேஜை மீது காலை வைத்துக்கொண்டு நன்றாக தூங்குகிறார். மாணவர்கள் அனைவரும் அமைதியாக அமர்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த வீடியோவை எடுக்கும் நபர், எவ்வளவு நேரம் ஆசிரியர் தூங்குகிறார் என்று கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும்  மாணவர்கள், அறை மணி நேரம் என நீண்ட நேர தயக்கத்திற்கு பிறகு கூறுகின்றனர். இந்த சத்தம் கேட்டு அந்த ஆசிரியர் கண் விழித்து பார்க்கிறார். அப்போது அவர் எதுவும் நடக்காததை போல மிகவும் இயல்பாக நடந்துக்கொள்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us