Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : ரூ.1,120 உடன் மனைவிக்கு தாலி வாங்க சென்ற 93 வயது முதியவர்.. உரிமையாளர் கொடுத்த Surprise!

Old Couple Video Goes Viral | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வெறும் ரூ.1,120 எடுத்துக்கொண்டு தனது மனைவிக்கு தங்க தாலி வாங்க கடைக்கு சென்ற 93 வயது முதியவருக்கு கடைக்காரர் வழங்கிய அன்பு பரிசின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : ரூ.1,120 உடன் மனைவிக்கு தாலி வாங்க சென்ற 93 வயது முதியவர்.. உரிமையாளர் கொடுத்த Surprise!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Published: 19 Jun 2025 13:53 PM

உலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு காதல் தான் முக்கிய காரணமாக உள்ளது. காதல் இல்லை என்றால் பூமியில் அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் போய்விடும். இந்த நிலையில், மும்பையில் தங்கம் விற்கும் விலை தெரியாமல் வெறும் ரூ.1,120 உடன் தனது காதல் மனைவிக்கு ஆசையாக தங்க தாலி வாங்க சென்ற முதியவருக்கு, கடை உரிமையாளர் வழங்கிய அன்பு பரிசின் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் என்னதான் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காதல் மனைவிக்கு தாலி வாங்க சென்ற 93 வயது முதியவர்

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்போரா ஜஹாகிர் கிராமத்தை சேர்ந்தவர் நிவ்ருத்தி ஷிண்டே. எளிய விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு 93 வயது ஆகிறது. இவரது மனைவி சாந்தாபாய். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த தம்பதி முதுமை அடைந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் காதல் இன்றும் இளமையாகவே உள்ளது. இந்த நிலையில், தனது காதல் மனைவிக்கு தங்க தாலி வாங்கி தர ஆசைப்பட்ட நிவ்ருத்தி ஷிண்டே, அவரை நகைக் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டதை தெரியாத நிவ்ருத்தி, வெறும் ரூ.1,120-ஐ கொடுத்து தனது மனைவிக்கு தங்க தாலி வேண்டும் என கேட்டுள்ளார். அதனை கேட்டு கடையின் உரிமையாளர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். மேலும் அவர் அந்த தாலியை தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த அந்த கடையின் உரிமையாளர், தம்பதியிடம் இருந்து வெறும் ரூ.20 மட்டும் பெற்றுக்கொண்டு தங்க தாலியை வழங்கியுள்ளார்.

முதிய தம்பதிக்கு நகைக்கடை உரிமையாளர் வழங்கிய அன்பு பரிசு

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த உலகில் தூய்மையான காதலும் மனிதமும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதற்கு இதுதான் சான்று என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.