Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : ஆத்தாடி.. இவ்வளவு பெரிய ராஜநாகமா?.. நடுங்க வைக்கும் வீடியோ!

Man Holding Giant King Cobra | ராஜ நாகம் பாம்புகளின் ராஜா என அழைக்கப்படுகிறது. இது மிகவும் விஷ தன்மை கொண்டது என்பதால் இதன் அருகில் செல்ல கூட பலரும் தயங்குவர். இந்த நிலையில், ராட்சத தோற்றம் கொண்ட ராக நாகம் ஒன்றை இளைஞர் தனது கையில் பிடித்துக்கொண்டு நிற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : ஆத்தாடி.. இவ்வளவு பெரிய ராஜநாகமா?.. நடுங்க வைக்கும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Jun 2025 16:37 PM

இணையத்தில் அவ்வப்போது பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவை பார்ப்பதற்கு சாதாரணமாக இருக்கும். குறிப்பாக வீட்டுக்குள் பாம்பு நுழைவது, படுக்கைக்கு கீழ் பாம்பு இருப்பது இப்படி வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோ பார்ப்பவரை நடுங்க வைக்கும் விதமாக உள்ளது. இளைஞர் ஒருவர் ராட்சத தோற்றம் கொன்ற ராஜ நாகத்தை கையில் (King Cobra) வைத்திருக்கும் வீடியோ தான். மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ள அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

நடுங்க வைக்கும் தோற்றம் கொண்ட ராட்சத ராக நாகம்

உலகத்தில் அதிக விஷம் உள்ள பாம்பு என்றால் அது ராஜ நாகம்  தான். பாம்புகளுக்கு அரசான உள்ள இந்த ராஜ நாகங்கள் சிறிய வகை பாம்புகளையே உணவாக உட்கொண்டு வாழும். எப்படி கடலில் மிகப்பெரிய உயிரினமாக உள்ள சுரா மற்றும் திமிங்கிலங்கள் சிறிய வகை மீன்களை உட்கொண்டு வாழுதோ, அதே போல ராஜ நாகமும் பாம்புகளை உணவாக உட்கொள்ளும். இதை விட அச்சுறுத்தும் ஒரு அச்மமும் ராஜ நாகத்திடம் உள்ளது. அதுதான் அதன் விஷ தன்மை. ராக நாகத்தின் விஷம் ஒருசில நிமிடங்களிலேயே ஒரு உயிரை கொல்லும் ஆற்றல் கொண்டது. இதனால் தான் அது ராஜ நாகம் என அழைக்கப்படுகிறது.

இணையத்தில் வைரலாகும் ராஜ நாகத்தின் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by mu’amar syahida (@amar_pd)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் ராட்சத ராஜ நாகம் ஒன்றைன் கையில் பிடித்தபடி நின்றுக்கொண்டு இருக்கிறார். தனது உடல் முழுவதையும் தரையில் வைத்துள்ள அந்த ராஜ நாகம் இளைஞரின் கையில் இருந்து எட்டி பார்த்தபடி உள்ளது. பொதுவாக ராஜநாகம் 12 அடி வரை வளரக்கூடியவையாக உள்ள நிலையில், அந்த பாம்பு நல்ல மலைப்பாம்பு போல் உள்ளது. மிகவும் அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட அந்த ராஜ நாகத்தை தனது கையில் பிடித்திருக்கும் அந்த இளைஞர் அசால்டாக நின்றுக்கொண்டு இருக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.