Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜிப்லைன் அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த சிறுமி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

12 Year Old Falls from Zipline | உலகின் பல்வேறு பகுதிகளில் ஜிப்லைன் விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஜிப்லைன் செய்த 12 வயது சிறுமி கயிறு அறுந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிப்லைன் அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த சிறுமி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2025 22:33 PM

மகாராஷ்டிராவில் (Maharashtra) ஜிப்லைன் (Zipline) அறுந்ததால் 30 அடியில் இருந்து கீழே விழுந்த 12 வயது சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிறுமி ஜிப்லைனில் சென்றுக்கொண்டு இருந்தபோது கம்பி அறுந்து அலறிக்கொண்டே கீழே விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், ஜிப்லைனில் சென்றுக்கொண்டு இருந்த மாணவி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிப்லைன் அறுந்து கீழே விழுந்த சிறுமி – பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு மலைகள் மற்றும் நீரோடைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள ஜிப்லைனில் சிறுமி சென்றுள்ளார். அப்போது திடீரென ஜிப்லைன் அறுந்த நிலையில், 30 அடியில் இருந்து சிறுமி கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்ட குடும்பத்தினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஜூன் 08, 2025 அன்று நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அலறிக்கொண்டு 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 12 வயது சிறுமி

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மலையின் ஒரு பக்கத்தில் இருந்து சிறுமி ஜிப்லைனில் மற்றொரு பக்கத்திற்கு செல்கிறார். அவ்வாறு ஜிப்லைனில் செல்லும் சிறுமி எந்த வித பயமும் இன்றி, மிகவும் மகிழ்ச்சியாக செல்கிறார். ஆனால், திடீரென ஜிப்லைன் அறுந்த நிலையில், சிறுமி அலறிக்கொண்டு கீழே விழுகிறார். அதை பார்த்ததும் அங்கிருக்கும் பொதுமக்கள் சிறுமி கீழே விழுந்துவிட்டதாக கூறுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

சிறுமி நலமுடன் உள்ளார் – குடும்பத்தினர்

சிறுமி கீழே விழுந்ததும் நீண்ட நேரம் உதவிக்கு போராடியதாகவும், அதன்பிறகே சிறுமியை மீட்டதாகவும் அவரின் தாய் கூறியுள்ளார். மேலும் சிறுமி சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டதாகவும், அவர் தற்போது நலமாக உள்ளதாகவும் அவர் தந்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.