Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : அச்சு அசல் தாஜ்மஹால் போலவே இருக்கும் வீடு.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ!

Madhya Pradesh Taj Mahal Replica | உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹாலை கண்டு யாராலும் வியக்காமல் இருக்க முடியாது. அத்தகைய கட்டட கலையும், நுட்பமும் கொண்டு இருக்கும். இந்த நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் அச்சு அசல் தாஜ்மஹால் போன்ற ஒரு வீட்டை கட்டியுள்ளார்.

Viral Video : அச்சு அசல் தாஜ்மஹால் போலவே இருக்கும் வீடு.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 14 Jun 2025 16:30 PM

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மஹால் (Taj Mahal) உள்ளது. இந்த அதிசயத்தை காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருவது உண்டு. ஆனால், மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) ஒருவர் அச்சு அசல் தாஜ்மஹாலை போல வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த தாஜ்மஹால் போன்ற வீடு குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக ஜொலிக்கும் தாஜ்மஹால்

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக உள்ள தாஜ்மஹால், உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) உள்ள ஆக்ரா நகரில் அமைந்துள்ளது. ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜுக்காக கட்டிய காதல் சின்னம் தான் தாஜ்மஹால். சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த தாஜ்மஹால், சிறந்த கட்டட கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கலை அழகு மற்றும் தனித்துவத்தை காண ஆண்டுக்கு சுமார் 8 மில்லியன் சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலுக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தாஜ்மஹால், காதலர்களின் அடையாள சின்னமாகவே விளங்குகிறது.

அச்சு அசல் தாஜ்மஹால் போலவே வீடு கட்டிய நபர்

 

View this post on Instagram

 

A post shared by Priyam Saraswat (@priyamsaraswat)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த வீட்டின் உரிமையாளர் அது குறித்து பேசியுள்ளார். இது எங்களுடைய 4 அறை கொண்ட தாஜ்மஹால். நாங்கள் இதில் வசிக்கிறோம். இந்த வீடு முழுவதுமாக மார்பிள் கற்களால் கட்டப்பட்டுள்ளது. நில தாஜ்மஹால் எந்த வடிவமைப்பில் இருக்குமோ அதே வடிவமைப்பில் தான் இந்த வீடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலின் 3-ல் 1 என்ற அளவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. அவர் தனது தாஜ்மஹால் வடிவிலாக வீட்டை குறித்து விளக்கும் போது அருகில் நிற்கும் இன்ஃப்ளூயன்சர், உங்கள் மனைவிக்காக இதை கட்டினீர்களா என கேட்கிறார். அதற்கு அவர், சிரித்துக்கொண்டே 100 சதவீதம் எனது மனைவிக்காக கட்டப்பட்டது தான் என்று கூறுகிறார்.

அதனை தொடர்ந்து அந்த இன்ஃப்ளூயன்சருக்கு வீடு முழுவதையும் அவர் சுற்றி காட்டுகிறார். வீடு முழுவதும் வெள்ளை நிறத்தில் உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அதன் அழகு மற்றும் கலையை பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!
கார் வாங்கப்போறீங்களா? 5 சிறந்த ஆட்டோமேட்டிக் கார்கள் இதோ!...
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க
விமான பயணத்தினால் பதட்டம் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!
தேங்காய் எண்ணெய் யூஸ் பண்றீங்களா? இந்த 5 டிப்ஸை டிரை பண்ணுங்க!...
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!
திருமணம் குறித்த சர்ச்சை - முதல் முறையாக மனம் திறந்த அனிருத்!...
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
சாம்பியன் தென்னாப்பிரிக்காவுக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!...
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!
ஸ்ரீலீலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பராசக்தி இயக்குநர்!...
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
விஷ்ணு மஞ்சுவின் 'கண்ணப்பா' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!...
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி..
மதுரையில் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளி.....
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்
மதுரை- அபுதாபி முதல் விமானம் - தமிழில் பேசிய பைலட்...
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!
பவுண்டரி எல்லை கேட்சில் புதிய மாற்றம்! இனி இது சட்டவிரோதம்..!...
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே..
தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்கள்.. தெற்கு ரயில்வே.....