Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : ஓடுங்க ஓடுங்க.. திடீரென துரத்த தொடங்கிய யானை.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய சுற்றுலா பயணிகள்!

Elephant Chases Tourists Near Forest Area | பெரும்பாலான மக்கள் காட்டு பகுதிகளில் தங்கி கேம் ஃபையர் உள்ளிட்டவற்றை செய்கின்றனர். அவ்வாறு செய்வது பொழுதுபோக்காக இருந்தாலும், அது வன விலங்குகளை தொந்தரவு செய்யும் விதமாக அமைந்துவிடும். அந்த வகையில், காட்டுக்கு அருகில் முகாமிட்டிருந்த சுற்றுலா பயணிகளை யானை துரத்தும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : ஓடுங்க ஓடுங்க.. திடீரென துரத்த தொடங்கிய யானை.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய சுற்றுலா பயணிகள்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Jun 2025 22:19 PM

யானைகள் மிகவும் சாந்தமான குணத்தை கொண்டிருக்கும் அன்பான விலங்குகள் தான். ஆனால், யானைகளுக்கு அதிக கோபமும் வரும். அதிக சத்தம், அறிமுகம் இல்லாத மனிதர்களின் நடமாட்டம் என யானைகளை சில விஷயங்கள் கோபப்படுத்தலாம். இத்தகை சூழல்களில் யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துக்கொள்ளும். அத்தகைய சம்பவத்தின் வீடியோ தான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயற்கை எழில் மிகுந்த பகுதியை சுற்றுலா பயணிகள் சிலர் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், அங்கு வரும் யானை ஒன்று மிகுந்த ஆக்ரோஷத்துடன் சுற்றுலா பயணிகளை துரத்துகிறது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுற்றுலா என்ற பெயரில் வனவிலங்குளை தொந்தரவு செய்யும் பொதுமக்கள்

இயற்கை எழில் கொஞ்சம் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்கள் சிலர் காடுகள், அருவிகள், நீர்வீழ்ச்சிகள் ஆகிய இடங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு சுற்றுலா செல்லும் பொதுமக்கள், இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். சுற்றுலா செல்லும் பகுதியில் சமைத்து சாப்பிடுவது, கத்தி கூச்சல் இடுவது, மதுபானம் குடிப்பது, மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை வீசி விட்டு வருவது என பல அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து இத்தனை செயல்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வன பகுதிக்கு அருகே கத்தி கூச்சலிட்ட சுற்றுலா பயணிகளை யானை ஒன்று துரத்தும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா பயணிகளை ஆக்ரோஷமாக துரத்திய யானை

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சுற்றுலா பயணிகள் சிலர் வன பகுதியை ஒட்டியுள்ள ஓடை ஒன்றின் அருகே முகாம் அமைத்து, அங்கு சமைத்துக்கொண்டும், ஓடைக்கு அருகே நின்றுக்கொண்டும் இருக்கின்றனர். இந்த நிலையில், அங்கு வரும் ஒற்றை காட்டு யானை ஒன்று அங்கிருக்கும் பொதுமக்களை மிகுந்த ஆக்ரோஷத்துடன் துரத்துகிறது. இதன் காரணமாக அங்கிருப்பவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.