AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : இலவச ரயில் பயணத்துக்காக மாற்றுத்திறனாளி போல் நடித்த நபர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

Man Fakes Disability for Free Train Ride | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். இந்த நிலையில், ரயிலில் இலவச பயணம் மேற்கொள்வதற்காக இளைஞர் ஒருவர் மாற்றுத்திறனாளி போல் நடித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : இலவச ரயில் பயணத்துக்காக மாற்றுத்திறனாளி போல் நடித்த நபர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 18 Jun 2025 16:41 PM IST

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் குற்ற சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள், மொபைல் வீடியோ காட்சிகள் உள்ளிட்டவையும் அடங்கும். அந்த வகையில், ரயிலில் இலவச பயணம் மேற்கொள்வதற்காக ஒருவர் மாற்றுத்திறனாளியை போல் நடித்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த நபரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் என்ன இடம் பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் வழங்கப்படும் பயண சலுகை

பொதுமக்கள் விரைவாகவும், குறைந்த கட்டணத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்திய அரசு நாடு முழுவதும் ரயில் சேவையை வழங்கி வருகிறது. வெளியூர்களுக்கு, வெளி மாநிலங்களுக்கு செல்லும் நபர்கள் பயணிக்கும் வகையில் விரைவு ரயில்களும், உள்ளூரில் பயணிக்க உள்ளூர் ரயில்களையும் இயக்கி வருகிறது. இதுதவிர பயணர்களுக்கு பயண சலுகைகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக, ரயிலில் பயணம் செய்யும் மாற்றுதிறனாளிக்கு 75 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்குகிறது. இதுதவிர அவர்களுக்கு என தனி இருக்கைகளையும் நிர்ணயம் செய்கிறது.

இலவச ரயில் பயணத்துக்காக மாற்றுத்திறனாளி போல் நடித்த நபர்

இவ்வாறு மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக அரசு பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில், அதனை தவறாக பயன்படுத்திய நபரின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து கீழே இறங்குகிறார். அவர் இறங்கும்போது மாற்றுத்திறனாளியை போல கால்களை மடக்கிக்கொண்டு மெதுவாக நடந்து வருகிறார். பின்னர் ஒரு சில நொடிகளிலேயே அவர் சாதாரணமாக நடக்க தொடங்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இத்தகைய தவறான மோசடி செயல்களை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us