AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : தனது 1 வயது மகளுக்கு Pink Roles Royce காரை பரிசளித்த தந்தை.. வைரல் வீடியோ!

Dad Gifts Pink Rolls Royce for 1 Year Old Daughter | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு பிங்க் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : தனது 1 வயது மகளுக்கு Pink Roles Royce காரை பரிசளித்த தந்தை.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Jun 2025 15:50 PM IST

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள அவர்களுக்கு பரிசு பொருட்களை வாங்கி தருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், துபாயை சேர்ந்த தந்தை ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு முழுவதும் பிரத்யேகமாக  வடிவமைக்கப்பட்ட பிங்க் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை (Roles Royce Car) பரிசளித்துள்ளார். தனது மகளின் ஒரு வயது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவர் இந்த காரை பரிசளித்துள்ளார். இத் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையி, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஒரு வயது மகளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த தந்தை

இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சன்பால், துபாயில் வசித்து வருகிறார். ANAX Developments நிறுவனத்தின் நிறுவனரான இவர் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். இவருக்கு இசபெல்லா சன்பால் என்ற ஒரு வயது மகள் உள்ளார். இந்த நிலையில், தனது மகளின் முதல் பிறந்தநாளுக்கு மறக்க முடியாத பரிசு வழங்க வேண்டும் என நினைத்த அவர், மகளுக்கு பிங்க் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்துள்ளார். தனது மகளுக்கென அவர் அந்த காரை பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் பிங்க் நிற ரோல்ஸ் ராய்ஸ் பரிசு வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சதீஷ் சன்பால் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் வந்து இறங்குகிறார். அவர் தனது குடும்பத்துடன் ஷோரூமுக்குள் செல்லும்போது அங்கு பிங் நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று நின்றுக்கொண்டு இருக்கிறது. அந்த கார், அந்த குழந்தைக்கு ஏற்றார் போல மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காரின் நிறம், காரில் இடம்பெற்றுள்ள குழந்தையின் பெயர், கார் சீட்டுகளில் குழந்தையின் பெயர், காருக்கு வெளிபுறம், முன்புறம் என சில இடங்களிலும் குழந்தையின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இது அந்த கார் குழந்தைக்காகவே முற்றிலும் உருவாக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு இவ்வளவு செலவ்ய் செய்வதா என ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர், இந்த குழந்தை இந்த பரிசை வாழ்நாள் முழுவதும் மறக்காது என்று கூறியுள்ளார்.

Follow Us