Viral Video : இந்திய வியாபாரியிடம் ரூ.50 குறைத்து பேரம் பேசும் வெளிநாட்டவர் – ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்
Bargain Skills Go Viral : பேரம் பேசுவது இந்தியர்களிடையே கை வந்த கலை என அனைவரும் நினைப்போம். ஆனால் வெளிநாட்டவர்களும் அதில் கை தேர்ந்தவர்கள் என்பது சமீபத்தில் வைரலாகும் வீடியோ மூலம் நிரூபணமாகியிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோவில் ஒரு வெளிநாட்டு பயணி சாலையோர வியாரியிடம் பேக் ஒன்றை பேரம் பேசி வாங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

நம் நாட்டில் சில இடங்களுக்கு ஏற்ப பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஷாப்பிங் மால் (Shopping Mall) செல்லும்போது அங்கே உள்ள கடைக்காரர் என்ன விலை சொல்கிறாரோ மறுபேச்சு இல்லாமல் வாங்கும் நாம், சாலையோர கடைகளில் நாம் கேட்கும் விலைக்கு தான் அவர்கள் விற்க வேண்டும் என வாக்குவாதம் செய்வோம். இது இந்தியர்களிடேயே காணப்படும் மிகப்பெரிய முரண். இதனை சற்றுக் கூர்ந்து கவனித்தால், இந்த பேரம் பேசும் குணம் நம் அம்மாவிடம் இருந்து கற்றுக்கொள்கிறோம். அம்மாவுடன் சந்தைக்கு சென்றிருந்தால் அவர்கள் காய்கறியாக இருந்தாலும் சரி, எம்ஆர்பி (MRP) அச்சிடப்பட்ட பலசரக்கு பொருட்களானாலும் சரி அவர்கள் கேட்கும் விலைக்கே வாக்கு வாதம் செய்து பொருட்களை வாங்கி வருவார்கள். இது இந்தியர்களுக்கு மட்டுமே உள்ள பழக்கம் என நினைத்தால் அது தவறு. இங்கே ஒரு வெளிநாட்டவர் கடைகளில் பேரம் பேசும் வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு உங்கள் அம்மா ஞாபகம் வரும்.
பொதுவாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களில் வெளிநாட்டவரிடம் இந்திய வணிகர்கள் கூடுதல் பணம் வசூலித்து அவர்களை ஏமாற்றும் வீடியோக்களை பார்த்திருப்போம். தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் இது தலைகீழாக நடந்துள்ளது. பல நேரங்களில், வெளிநாட்டினர் கூட இதுபோன்ற பேரம் பேசி பொருட்களை வாங்குகின்றனர், அதைப் பார்த்த பிறகு, மக்களால் தங்கள் ஆச்சரியத்தையும் சிரிப்பையும் கட்டுப்படுத்த முடியாது.




இந்திய வியாபாரியிடம் பேரம் பேசும் வெளிநாட்டு பயணி
View this post on Instagram
வைரலாகும் வீடியோவில் ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒரு பேக் ஒன்றை வாங்க கடைக்கு வருகிறார். அதைக் கேட்ட கடைக்காரர் அதன் விலை ரூ.550 என்று கூறுகிறார். அதைக் கேட்டதும், அந்த நபர் முற்றிலும் அதிர்ச்சியடைகிறார். அதற்கு அவர் 550 ரூபாய் இல்லை என்று கூறுகிறார். பின்னர் கடைக்காரர் மீண்டும் ரூ. 500க்கு கேட்கிறார். சிறிது நேரம் 400 ரூபாயாக குறைகிறார், ஆனால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி அதற்கு அவர் உடன்படவில்லை. பேக் விற்பனையாளர் ரூ.100 குறைகிறார். ஒரு கட்டத்தில் ரூ.400க்கு குறைவாக கொடுத்தால் கட்டுபடியாகாது என்கிறார். ஒரு கட்டத்தில் பேக் வேணாம் என கிளம்பிய வெளிநாட்டு பயணியிடம், வியாபாரி, 200 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள சொல்கிறார். அவர் முடியாது என மறுத்துவிட்டு செல்கிறார்.
இந்த காணொளி நேட்டிவிட்டி என்ற கணக்கில் இன்ஸ்டாவில் பகிரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இதை லைக் செய்துள்ளனர், லட்சக்கணக்கான மக்கள் இதைப் பார்த்துள்ளனர், இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் அதில் வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர்,வெளிநாட்டு பயணி பேரம் பேசியதைப் பார்த்தால் என் அம்மா நியாபகம் வருகிறார் என்றார். மற்றொருவர், அந்த வெளிநாட்டவரைப் பார்த்த பிறகு, அவர் ஒரு முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருந்ததாகவும், அவர் எவ்வளவு தந்திரமாக பேரம் பேசுகிறார் என ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.