AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

’பிரியாணி வேணும்’ சிறுவனுக்கு சப்ரைஸ் கொடுத்த அமைச்சர்.. அங்கன்வாடி மெனுவில் மாற்றம்!

Kerala Anganwadi Food Menu Added Biryani : கேரள மாநிலத்தில் அங்கன்வாடி மெனுவில் மாற்றம் செய்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவிப்பை வெளியிட்டார். சிறுவனின் கோரிக்கையை ஏற்று, உப்புமாவிற்கு பதிலாக முட்டை பிரியாணி மற்றும் முட்டை புலாவ் அங்கன்வாடி மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது.

’பிரியாணி வேணும்’ சிறுவனுக்கு சப்ரைஸ் கொடுத்த  அமைச்சர்.. அங்கன்வாடி மெனுவில் மாற்றம்!
பிரியாணி கேட்ட சிறுவன்Image Source: TV9
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 04 Jun 2025 12:36 PM IST

கேரளா,  ஜூன் 04 : சிறுவனின் கோரிக்கையை ஏற்று, கேரள மாநிலத்தில் உள்ள அங்கன்வாடிகளில் உப்புமாவிற்கு பதில் பிரியாணியை சேர்க்க அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சிறுவன் பிரியாணி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், தற்போது அங்கன்வாடி மெனுவில் பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது குழந்தைகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் பல்வேறு அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடிகளில் சிறுவர்களுக்கு காலை, மதியம் உணவு தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. காலையில் உப்புமா, இட்லி போன்றவையும், மதிய நேரங்களில் சாதம், சாம்பார், பொறியல் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

சிறுவனுக்கு சப்ரைஸ் கொடுத்த அமைச்சர்

இதற்கிடையில், அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவுகள் குறித்து சமீபத்தில் சிறுவன் பேசிய வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது, ஆலப்புழா பகுதியைச் சேர்நத் ஷங்கு என்ற சிறுவன், அங்கன்வாடிகளில் உப்புமாவிற்கு பதிலாகா பிரியாணி மற்றும், சிக்கன் ஃப்ரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அந்த வீடியோவில், தொப்பி அணிந்துக் கொண்டு சிறுவன் ஷங்கு தனது தாயிடம் கூறுகிறார். தனது வீட்டில் பிரிணாணி சாப்பிட்டுக் கொண்டே, இந்த கோரிக்கையை வைத்தார்.

தனக்கு அங்கன்வாடியிலும் உப்புமாவிற்கு பதில் பிரியாணி, சிக்கன் ஃப்ரை வேண்டும் என கூறுகிறார். இந்த வீடியோ வெளியாகி பலரது கவனத்தை பெற்றது.  இந்த வீடியோ வைரலானதை  அடுத்து, அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு சிறந்த உணவு வழங்கப்பட வேண்டும் என்று கருத்துகள் எழுந்தது.

அங்கன்வாடி மெனுவில் மாற்றம்


இந்த நிலையில், டிவி 9 தகவலின்படி, தற்போது கேரளா மாநிலம் முழுவதும் அங்கன்வாடிகளில் மெனுவை மாற்றி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.  குறிப்பாக, சிறுவனின் கோரிக்கையை ஏற்று,  அங்கன்வாடிகளில் பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது.

உப்புமாவிற்கு பதிலாக  அங்கன்வாடிகளில் மதிய  உணவில் பிரியாணி சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும், அசைவ பிரியாணி இல்லாமல், முட்டை பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது. முட்டை பிரியாணியுடன் பால், ஆம்லெட், முளைக்கட்டிய பயிறு ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.  இதுகுறித்து  அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது பேஸ்புக் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

அதன்படி, அங்கன்வாடி காலை உணவில் திங்கள் கிழமைகளில் பால், கஞ்சி, தேங்காய் பால், கீரைகளும், மதிய உணவில் சாதம், பச்சைப்பயிறு கறி, உப்பேரி, தோரன், திண்பண்டங்களில் பாயாசம், தானியங்கள் வழங்கப்படுகிறது. செவ்வாய்கிழமைகளில் காலை உணவில் நியூட்ரி லட்டு, மதிய உணவில் முட்டை பிரியாணி/முட்டை புலாவ், பழங்கள், தின்பண்டங்களில் ராகி வழங்கப்படுகிறது.

புதன்கிழமைகளில் காலை உணவில் பால், அரிசி உருண்டை, கொழுக்கட்டை வேர்க்கடலை, மதிய உணவில் பச்சை பயிறு கறி, சோயா ப்ரை வழங்கப்படுகிறது. வியாழன் கிழமைகளில் காலை உணவில் ராகி, மதிய உணவில் சாதம், முளைக்கட்டிய பயிறு, கீரை பொறியல், சாம்பார், முட்டை வழங்கப்படுகிறது.

வெள்ளிக் கிழமைகளில் காலை உணவில் பால், கொழுக்கட்டையும், மதிய உணவில் சாதம், பச்சைப்பயிறு கறி, அவியல், காய்கறிகள் வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் காலை உணவில் ஊட்டச்சத்து லட்டு, மதிய உணவில் காய்கறி புலாவ், முட்டை, ரைதாவும் வழங்கப்படுகிறது.

Follow Us