Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video: அமிதாப் பச்சனை தீவிரமாக தேடும் டென்மார்க் பெண்.. ஏன் தெரியுமா?

Danish Woman Seeks Amitabh for Best Papad : நடிகர் அமிதாப் பச்சன் உலக அளவில் மிகவும் பிரபலம் வாய்ந்த நடிகராக இருந்து வருகிறார். இந்த நிலையில் டென்மார்க் பெண் அப்பள கவரில் உள்ள அமிதாப் பச்சனின் போட்டோவை பார்த்து அவர் தான் அந்த அப்பள நிறுவனத்தின் உரிமையாளர் என பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video: அமிதாப் பச்சனை தீவிரமாக தேடும் டென்மார்க் பெண்.. ஏன் தெரியுமா?
அமிதாப் பச்சன் குறித்து டென்மார்க் பெண் பகிர்ந்த வீடியோ
karthikeyan-s
Karthikeyan S | Published: 24 Jun 2025 21:19 PM

இந்திய உணவு மீதான தனது அன்பைப் பற்றி சமூக ஊடகங்களில் ஒரு டென்மார்க் (Denmark) பெண் பதிவிட்ட வீடியோ நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. அந்தப் பெண்ணின் பதிவு, பிரபலமான இந்திய உணவான அப்பளத்தை பாராட்டியது மட்டுமல்லாமல், அந்தப் அப்பளத்தை விளம்பரப்படுத்தியவர் தான் அதன் உரிமையாளர் என்று குறிப்பிட்டதும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ஆனால் அந்த பிராண்டை இங்கே விளம்பரப்படுத்தியவர் வேறு யாருமல்ல, நமது பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன்தான் (Amitabh Bachchan). அந்தப் பெண்ணின் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு அமிதாப் பச்சன் குறித்து விளக்கி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இந்தியர்களிடையே வைரலாகி வருகிறது.

ஒரு டென்மார்க் பெண், இந்திய உணவுகளின் மீது தனக்குள்ள அன்பைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட பதிவு, நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், அந்தப் பெண் ஒரு பிரபலமான இந்திய உணவு நிறுவனத்தை பாராட்டியது மட்டுமல்லாமல், அந்த பிராண்டை விளம்பரப்படுத்திய நபரை சிற்றுண்டியின் உற்பத்தியாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  ​​ஃபிரடெரிக்கே என்ற டேனிஷ் பெண் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அந்தப் பெண் ஒரு அப்பளம் பாக்கெட்டைக் காட்டி, அதில் அமிதாப் பச்சனைப் பற்றிப் பேசுகிறார். இந்த பிராண்டில் அந்த நபர் செய்த அப்பளங்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும், அது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அந்தப் பெண் கூறினார்.

அமிதாப் பச்சன் குறித்து டென்மார்க் பெண் பகிர்ந்த வீடியோ

 

 

View this post on Instagram

 

A post shared by Frederikke (@bhukkad_bidesi)

அவள் தன்னிடம் உள்ள அப்பளங்கள் தீர்ந்து போய்விட்டதாக சொல்லும் அவர், இந்த பிராண்ட் அப்பளம் எங்கே கிடைக்கும்னு யாருக்காவது தெரியுமா? உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து சொல்லுங்கள். இந்த பிராண்ட் அப்பளங்கள் மிகவும் நன்றாக உள்ளன. இந்த அப்பளத்தை நேபாளத்தில் வாங்கேனேன். ஆனால் தற்போது அவை டென்மார்க்கில் எங்கும் கிடைக்கவில்லை. இந்தப் போட்டோவில் இருக்கும் நபர் யார் என்று யாருக்காவது தெரிந்தால், தயவுசெய்து உதவுங்கள்” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அமிதாப் பச்சன் யார் என்று தெரியாத ஒரு பெண், அவரை உணவு உற்பத்தியாளர் என்று தவறாகக் கருதி செய்த பதிவு, இந்திய பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பதிலுக்கு வேடிக்கையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு நெட்டிசன் நடிகர் அமிதாப் பச்சனை டேக் செய்து, “ஐயா, தயவுசெய்து இந்தப் பெண்ணுக்கு உதவுங்கள்” என்று கமெண்ட் செய்துள்ளார். இருப்பினும், மற்றொருவர் அந்தப் பெண்ணுக்கு அமிதாப் பச்சன் யார் என்பது ஏற்கனவே தெரிந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார்.