AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : பசியுடன் ஓடி வந்த குட்டி யானை.. கரும்பு துண்டை கொடுத்த பழக்கடை உரிமையாளர்.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!

Baby Elephant's Cute Sugarcane Snack | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குட்டி யானை ஒன்று சாலையோரம் இருந்த தள்ளு வண்டி பழக்கடையில் கரும்பு வாங்கி சாப்பிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : பசியுடன் ஓடி வந்த குட்டி யானை.. கரும்பு துண்டை கொடுத்த பழக்கடை உரிமையாளர்.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 24 Jun 2025 14:42 PM IST

யானை குட்டி (Baby Elephant) ஒன்று சாலையில் தனது தாயுடன் நடந்து செல்லும்போது, சாலையோர பழக்கடையில் இருந்து கரும்பு வாங்கி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த குட்டி யானையின் வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலையோர கடையில் கரும்பு வாங்கி சாப்பிட்ட யானை குட்டி

யானைகளுக்கு ஆக்ரோஷமான குணம் இருப்பதை போலவே, குழந்தை தனமான குணமும் உள்ளது. தங்களுக்கு பிடித்த விஷயம், பொருள், நபர்கள் இருந்தால் அவை குழந்தைகளாக மாறிவிடும். அதுவும் யானை குட்டிகளை சொல்லவா வேண்டும். அவை அச்சு அசல் குழந்தைகளை போலவே நடந்துக்கொள்ளும். அந்த வகையில், சிறு குழந்தை போல சாலையோர கடை ஒன்றில் கரும்பு வாங்கி சாப்பிடும் யானை குட்டியின் வீடியோ வெளியாகி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் யானை குட்டியின் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சாலையில் சில யானைகள் சென்றுக்கொண்டு இருக்கின்றன. ஒன்றின் பின் ஒன்றாக சென்றுக்கொண்டிருக்கும் அந்த யானைகளில், தாய் யானையுடன் ஒரு குட்டி யானையும் நடந்து செல்கிறது. அந்த சாலையின் ஓரத்தில் பெண் ஒருவர் தள்ளு வண்டி பழக்கடை நடத்துகிறார். இந்த நிலையில் சாலையில் சென்றுக்கொண்டு இருந்த யானை குட்டி, பழக்கடையை பார்த்ததும் அந்த கடைக்கு அருகில் செல்கிறது. ’

சிறுபிள்ளை போல நடந்துக்கொண்ட குட்டி யானை

யானை குட்டி ஓடி வருவதை பார்க்கும் அங்கிருக்கும் நபர் பயன்ப்படுகிறார். ஆனால், கடையின் உரிமையாளாரன அந்த பெண்ணோ, யானைக்கு குட்டி என்ன சாப்பிட பிடிக்கும் என்பதை தெரிந்தவர் போல ஒரு சிறிய கரும்பு துண்டை எடுத்து கொடுக்கிறார். அதனை வாங்கிக்கொண்டு சிறு பிள்ளையை போல அந்த யானை குட்டி அதன் தாயிடம் ஓடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us