AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : மது போதையில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற இளம் பெண்.. ஷாக் வீடியோ!

Woman Drives Car on Railway Tracks | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தின் மீது கார் ஓட்டிச் செல்லும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : மது போதையில் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற இளம் பெண்.. ஷாக் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jun 2025 14:55 PM IST

ஹைதராபாத், ஜூன் 26 : ஹைதராபாத்தில் (Hyderabad) இளம் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் மிக வேகமாக கார் ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த இளம் பெண்ணை பிடித்து ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த இளம் பெண்ணுக்கு உரிய தண்டனை வாங்கி தர வேண்டு  என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய இளம் பெண்

பொதுவாக கார், பைக் ஆகிய வாகனங்கள் சாலையில் தான் செல்லும். ரயில்கள் மட்டும்தான் ரயில் தண்டவாளத்தில் செல்லும். ஆனால், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் கார் ஒன்று ரயில் தண்டவாளத்தில் கண்மூடித்தனமாக ஓடுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ரயில் தண்டவாளத்தில் வேகமாக காரை ஓட்டிச் சென்ற இளம் பெண்ணை பிடித்து ரயில்வே பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், அந்த இளம் பெண் மது போதையில் இவ்வாறு வேகமாக காரை ஓட்டிச் சென்றது தெரிய வந்துள்ளது.

மதுபோதையில் வேகமாக காரை ஓட்டிச் சென்ற இளம் பெண்

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ரயில் தண்டவாளத்தில் வெள்ளை நிற கார் ஒன்று மிக வேகமாக செல்கிறது. அதனை கண்டு அங்கிருக்கும் பொதுமக்கள் கத்தும் நிலையில், அந்த கார் நிற்காமல் மிக வேகமாக செல்கிறது. இந்த ஒருசில விநாடிகள் அடங்கிய வீடியோ காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கார் சென்ற நேரத்தில் ரயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அந்த இளம் பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us