AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : குடும்பத்துடன் இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண் – காரணம் என்ன தெரியுமா?

US Woman in India: அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் ஃபிஷர் என்ற பெண் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை ஆகிய காரணங்களுக்காக குடும்பத்துடன் இந்தியாவில் குடியேறியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்ட அவர், இந்தியா என் வாழ்க்கையை மாற்றி விட்டது, நான் இனி ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Viral Video : குடும்பத்துடன் இந்தியாவில் குடியேறிய அமெரிக்க பெண் – காரணம் என்ன தெரியுமா?
அமெரிக்கப் பெண் கிறிஸ்டன் ஃபிஷர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jun 2025 21:19 PM IST

இந்தியா (India) பன்முக கலாச்சாரம் கொண்டது. இந்தியா மக்களில் பெரும்பான்மையானவர்கள் இன்றளவும் பழமை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்தியர்களின் வாழ்க்கை முறையும் பழக்க வழக்கங்களும் வெளிநாட்டவர்கள் பலரையும் ஈர்த்துள்ளது. இதனால் வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் வாழ்வதற்காக அமெரிக்காவை (America) விட்டு வந்த பெண் பற்றி தெரியுமா? இந்தியா வாழ்க்கை முறையை விரும்பி இந்தியாவிற்கே குடும்பத்துடன் வந்து குடியேறியதாக அமெரிக்கப் பெண் கிறிஸ்டன் ஃபிஷர் கூறியுள்ளார். கடந்த 2021ல் கணவன் டிம் மற்றும் மூன்று மகள்களுடன் இந்தியா வந்த அவர், வாழ்க்கையை முழுமையாக மாற்றிய அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் (Instagram) பகிர்ந்து வருகிறார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிறிஸ்டன் ஃபிஷர்,“எனது வாழ்க்கையை எந்த திசையில் கொண்டு போவது என்ற வாய்ப்புகள் என் முன் இருந்தது.  அதில் ஒன்று அமெரிக்காவில் ஒரு சாதாரண வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது ஒரு துணிச்சலான, அபூர்வமான வாழ்க்கையை உருவாக்கலாம்” என அவர் தனது வைரல் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்திய வாழ்க்கை என் மனதை மாற்றியுள்ளதாக தெரிவித்த கிறிஸ்டன்

 

 

View this post on Instagram

 

A post shared by Kristen Fischer (@kristenfischer3)

கடந்த நான்கு வருடங்களாக இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். இங்கு எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்திருக்கிறது. மேலும் உணவு பழக்கங்கள், இந்திய கலாச்சாரங்களை உற்சாகமாக அனுபவித்து வருகிறோம். மேலும், மாற்றுத்திறனாளி பெண் குழந்தையையும் தத்தெடுத்துள்ளோம். இந்தியா என் வாழ்க்கையை மாற்றி விட்டது. நான் இனி ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது,” எனக் கூறியிருக்கிறார்.

எங்கள் வாழ்க்கையின் சீக்ரெட் இது தான்

தானும் தனது கணவர் டிம் இணைந்து ஒரு வெப் டெவலப்மென்ட் ஏஜென்சி நடத்துவதாக தெரிவித்த அவர். “அமெரிக்க டாலரில் வருமானம், இந்திய ரூபாயில் செலவுகள் என்பதே அவர்கள் வாழ்க்கையின் சீக்ரெட் என குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இது எளிதில் வாழ்க்கை நடத்தவும், வணிக வளர்ச்சிக்கும் ஏற்றது என கூறுகிறார்கள். குறைந்த வாழ்க்கைச் செலவுகள் மற்றும் விருப்பமான நாடாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததை ஒரு ‘வின்-வின்’ சூழ்நிலையாக கருதுவதாக தெரிவித்தார்.

அவர்களது வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரையும். முக்கியமாக இந்திய இளைஞர்களையும் மற்றும் டிஜிட்டல் தொழில்முனைவோர்களை ஈர்த்துள்ளது. பரிச்சயமான வாழ்க்கையைவிட, எளிமையான வாழ்க்கையை தேர்வு செய்ததின் பலனை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்தக் கதையின் மூலம், உலகம் முழுவதும் உள்ளோர் ‘வித்யாசமான’ வாழ்க்கைக்காக இந்தியாவை நோக்கி வருகிறார்கள் என்பது ஒருமுறை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Follow Us