AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மனிதனை கடித்த பாம்பு 5 நிமிடத்தில் உயிரிழந்த சம்பவம்.. நிபுணர்கள் கூறுவது என்ன?

Sanke Bite: மத்திய பிரதேசத்தில் இருக்கும் பால்காட் மாவட்டத்தில் சச்சின் நாக்புரே என்ற 25 வயது நபரை விஷப்பாம்பு கடித்துள்ளது. அவரை கடித்த 5 நிமிடத்திலேயே பாம்பு உயிரிழந்துள்ளது, இந்த சம்பவம் மிகவும் அரிதான ஒன்று என்றும், இது போல் நடப்பது வழக்கத்திற்கு மாறானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதனை கடித்த பாம்பு 5 நிமிடத்தில் உயிரிழந்த சம்பவம்.. நிபுணர்கள் கூறுவது என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Jun 2025 12:40 PM IST

மத்திய பிரதேசத்தில் மிகவும் அரிதான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தின் பால்காட் மாவட்டத்தில் விஷப்பாம்பு ஒரு நபரை கடித்த பின் சுமார் ஐந்து நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பால்காட்டில் குட்சோடி கிராமத்தில் நடந்துள்ளது. பாம்பு கடித்த நபர் தற்போது ஆபத்திலிருந்து மீண்டு விட்டதாகவும் மாவட்ட மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பால்காட் மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான சச்சின் நாக்பூரே கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். அவர் வியாழன் அதாவது ஜூன் 19 2025 அன்று காலை 7 மணி அளவில் தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது கீழே பாம்பு இருந்ததை தெரியாமல் அதன் மேல் கால் வைத்து மிதித்துள்ளார்.

சச்சினை கடித்த பாம்பு உயிரிழந்த சம்பவம்:

உடனடியாக பாம்பு அந்த நபரை கடித்துள்ளது. சச்சினை கடித்த பாம்பு ஐந்து முதல் ஆறு நிமிடங்களில் உயிரிழந்து எந்த அசைவும் இல்லாமல் கிடந்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் அரிதான ஒன்று என்றும் இது வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு மனிதனை கடித்த பின் பாம்பு உயிர் இழப்பது என்பது மிகவும் அரிதான ஒரு செயலாகும். இதற்கு சாத்தியமான இரண்டு காரணங்களே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த நபரிடம் கேட்கையில் பல ஆண்டு காலமாக அவர், பல் துலக்க மூலிகை செடியில் இருந்து குச்சிகளை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். கடந்த ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக சிட்சிடியா , பிசுண்டி , பல்சா , ஜாமுன், மாம்பழம், துவார், ஆஜன், கரஞ்சி, வேம்புஇந்த மரங்களில் குச்சியை அவர் பல் துலக்க பயன்படுத்தியுள்ளார். இந்த மூலிகை மரங்களின் கலவையே பாம்பின் ரத்தத்தை நச்சுத்தன்மையாக்கி அது உயிரிழக்க காரணமாக இருந்திருக்கும் என நம்பப்படுகிறது.

பாம்பு உயிரிழக்க என்ன காரணம்:

வனத்துறை அதிகாரியான தர்மேந்திரா பிசேன் இது தொடர்பாக பேசுகையில், “ இது போன்ற சம்பவம் நடப்பது அரிதிலும் அரிதான ஒன்று. மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே ஒரு பாம்பு ஒருவரை கடித்த உடனே உயிரிழக்க கூடும் என விளக்கியுள்ளார். மேலும் ஒரு நபரை பாம்பு கடித்தவுடன் அடுத்த நொடியை மிகவும் வேகமாக திரும்பினால் அதன் விஷப்பை உடைந்து அதன் மரணத்திற்கு காரணமாக அமையும் எனவும் அவர் விளக்கியுள்ளார். இருப்பினும் மனிதனை கடித்த பாம்பு ஐந்து நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது

Follow Us