AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : வீட்டில் சுழன்று சுற்றிய சிலிண்டர்.. திடீரென வெடித்ததால் அதிர்ச்சி.. இணையத்தில் வைரலாகும் பகீர் விடியோ!

Gas Cylinder Explosion in Home | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், வீடு ஒன்றில் கேஸ் சிலிண்டர் சுழன்று சுற்றி பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : வீட்டில் சுழன்று சுற்றிய சிலிண்டர்.. திடீரென வெடித்ததால் அதிர்ச்சி.. இணையத்தில் வைரலாகும் பகீர் விடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Jun 2025 16:01 PM IST

சிலிண்டர் வெடிப்பது, தீப்பற்றி எரிவது போன்ற சம்பவங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சிலிண்டர் லீக் ஆகி பயங்கர சத்தத்துடன் வெடித்து பிறகு அடுத்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது என்ன, சிலிண்டர் வெடித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திடீரென லீக் ஆகி வெடித்த சிலிண்டர்

சிலிண்டர்களில் ஏற்படும் சிக்கல்கள், முறையாக பராமரிக்காதது, அடுப்பில் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்டவை சிலிண்டர் வெடி விபத்து ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த நிலையில், சிலிண்டரை முறையாக கையால்வது எப்படி என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து வைத்துக்கொள்ளவில்லை என்றால் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. அந்த வகையில், சிலிண்டரில் சிக்கல் ஏற்பட்டு அது வெடி விபத்தை உருவாக்கம் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுழன்று வெடித்த சிலிண்டர் – பகீர் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், பெண் ஒருவர் சிலிண்டரை கையாலும்போது சிக்கலை சந்திக்கிறார். அதாவது சிலிண்டர் பைப் பிடுங்கி நிலையில், அந்த பெண் பயத்தில் வெளியே ஓடுகிறார். அப்போது அந்த சிலிண்டரில் இருந்து கேஸ் மிக வேகமாக வெளியேறுகிறது. அப்போது அந்த சிலிண்டர் தரையில் சுழல்கிறது. அதன் காரணமாக அந்த அறையில் இருக்கும் ஒரு ஆணும், பெண்ணும் அங்கிருந்து வெளியே செல்கின்றனர்.

சிறிது நேரம் கழித்து அந்த பெண் மீண்டு உள்ளே வந்து பார்க்கிறார். அப்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து அருகில் இருக்கும் அடுப்பு தீப்பற்றி எரிகிறது. அதனை கண்டு அந்த பெண் அலறி அடித்துக்கொண்டு ஒடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சிலிண்டரில் இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் போது உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது பாதுகாப்பானதாக இருக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Follow Us