AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : இவ்வளவு எளிமையா?.. பொதுமக்களை வியக்க வைத்த ஜப்பான் இளவரசி!

Princess Kako's Viral Video | ஜப்பான் இளவரசி காகோ 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவர் பிரேசில் சென்ற போது விமானத்தில் எகனாமி வகுப்பில் ஜன்னல் மீது சாய்ந்து தூங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து பலரும் வியந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Viral Video : இவ்வளவு எளிமையா?.. பொதுமக்களை வியக்க வைத்த ஜப்பான் இளவரசி!
ஜப்பான் இளவரசி காகோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Jun 2025 16:10 PM IST

ஜப்பான் இளவரசி காகோ விமானத்தில் ஜன்னல் மீது சாய்ந்துக்கொண்டு தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் பொம்மை போல தூங்குவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இளவரசி காகோ தனி விமானத்தில் பயணம் செய்யாமல், பொதுமக்கள் பயணம் செய்யும் விமானத்தில் எகனாமி வகுப்பில் பயணம் செய்த நிலையில், அவரது எளிமை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இளவரசி காகோ விமானத்தில் தூங்கும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அதில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் இளவரசி காகோ

30 வயதாகும் ஜப்பான் இளவரசி காகோ 11 நாட்கள், 8 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், அவர் பிரேசில் சென்ற போது விமானத்தின் எகனாமி வகுப்பில் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து நான்கு நாட்களாக பயணம் செய்துக்கொண்டே இருந்த காகோ, விமான இருக்கையில் அமர்ந்தது ஜன்னல் மீது சாய்ந்த தூங்க தொடங்கியுள்ளார். இதனை சக பயணிகள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

விமானத்தில் எகனாமி வகுப்பில் தூங்கிய ஜப்பான் இளவரசி காகோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இளவரசி காகோ, தனது உதவியாளர்களுடன் விமானத்தில் நின்றுக்கொண்டு இருக்கிறார். உதவியாளர்கள் உடைமைகளை எடுத்து அடுக்கியதும் அவர் தனது இருக்கையில் சென்று அமர்ந்துக்கொள்கிறார். ஒருசில நிமிடங்கள் கழித்து அவர் அங்கிருக்கும் ஜன்னல் மீது சாய்ந்த தூங்க தொடங்குகிறார். ஒரு இளவரசி மிகவும் சாதாரணமாக ஜன்னல் மீது சாய்ந்து தூங்குவதை பார்த்த இணைய வாசிகள் அவர் பொம்மை போல தூங்குவதாகவும், அவரது எளிமை குறித்தும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us