AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைரல் வீடியோ : காளை செய்த சம்பவம்… பயந்து ஓடும் சிறுத்தைகள்

Leopards Fear Bold Bull : சிறுத்தைகள் வேட்டையாடும் விலங்குகள். அவற்றிடம் வேகமாக தாக்கும் திறனும், இரையை பிடிக்க மிகுந்த ஆற்றலும் இருக்கும். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோ அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில் கம்பீரமாக நடந்து வரும் காளையைப் பார்த்து இரண்டு சிறுத்தைகளும் பயந்து ஓடுகின்றன.

வைரல் வீடியோ : காளை செய்த சம்பவம்… பயந்து ஓடும் சிறுத்தைகள்
காளையை பார்த்து ஓடும் சிறுத்தைகள்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Jun 2025 19:22 PM IST

மனிதர்களைப் போல காடுகளில் வசிக்கும் விலங்குகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி குணங்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை மூர்க்கமாக தாக்கி வேட்டையாடி பழக்கம் உள்ளவை. சிங்கம் (Lion), புலி, சிறுத்தை (Leopard) ஆகிய விலங்குகள் தங்களை விட வலிமை குறைந்த விலங்குகளை தாக்கி கொல்லும் வல்லமை படைத்தவை. இது குறித்த வீடியோக்களை டிஸ்கவரி சேனல்களில் பார்த்திருப்போம். குறிப்பாக சிறுத்தைகள் வேட்டையாடும் விலங்குகள். அவற்றிடம் வேகமாக தாக்கும் திறனும், இரையை பிடிக்க மிகுந்த ஆற்றலும் இருக்கும். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில் இரண்டு சிறுத்தைகள்,  காளை மாட்டுக்கு பயந்து ஓடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

சிறுத்தைகள் மூர்க்கமாக தாக்கக்கூடியது. எந்த விலங்குகளும் அதனிடம் இருந்து தப்பிக்க முடியாது. ஆனால் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு காளை இரண்டு சிறுத்தைகளின் நிலையை கவலைக்குரியதாக மாற்றியிருக்கிறது. இரண்டு சிறுத்தைகளும் காளையை பார்த்து பயந்து ஓடுகின்றன. இது சிறுத்தைகள் குறித்த நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

காளைக்கு பயந்து சிறுத்தைகள் ஓடும் வீடியோ

 

வீடியோவில், காட்டுப்பகுதியில் ஒரு காளை வேகமாக நடந்து வருகிறது.  அதன் முன் இரண்டு சிறுத்தைகள் அதன் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.  சிறுத்தைகள் இரண்டு காளையை இரையாக்க காத்திருப்பது போல் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவை போல சிறுத்தையை நோக்கி நடந்து வருகிறது. காளை நம்பீரமாக அருகில் வருவதைப் பார்த்து சிறுத்தைகள் கலக்கமடைகின்றன. பின்னர் சிறுத்தைகள் மெல்ல பின் வாங்குகின்றன. ஒரு கட்டத்தில் காளையின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் கலக்கத்துடன் ஓடத்தொடங்குன்றன. இது காண்போரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த காணொளி @Pandit_G_143 என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது எக்ஸ் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் நம்ப முடியவில்லை என தெரிவித்தனர்.  இந்தக் காட்சியைப் பார்த்த பிறகு, இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நடைபெறும். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.  மற்றொரு பயனர் ஒருவேளை சிறுத்தைகளுக்கு பசி இல்லாத காரணத்தால் இது நடந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்னொருவர், இந்த காளை சிறுத்தைகளை அச்சுறுத்தும் என நான் கனவிலும் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Follow Us