AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : வீட்டில் இருந்து தப்பித்து ஓடிய ஜீப்ரா.. ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி பிடித்து வந்த அதிகாரிகள்.. வைரல் வீடியோ!

Zebra Hanging From Helicopter | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அமெரிக்காவின் டென்னசி பகுதியில் வரிக்குதிரை ஒன்று ஹெலிக்காப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : வீட்டில் இருந்து தப்பித்து ஓடிய ஜீப்ரா.. ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி பிடித்து வந்த அதிகாரிகள்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Jun 2025 20:31 PM IST

அமெரிக்காவின் (America) , டென்னசி (Tennessee) பகுதியில் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த வரிக்குதிரை (Zebra) ஒன்று, வீட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளது. அவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிய அந்த வரிக்குதிரை, அந்த பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களிட இருந்து தொடர்ந்து புகார்கள் வந்துக்கொண்டே இருந்த நிலையில், அதிகாரிகள் வரிக்குதிரையை பிடிக்க முடிவு செய்து அதனை ஹெலிக்காப்டரில் கட்டி தூக்கி வந்துள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் வீட்டை விட்டு தப்பி ஓடிய வரிக்குதிரை

இந்தியாவில் நாய், பூனைகளை நாம் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை போல அமெரிக்காவில் ஒரு வீட்டில் வரிக்குதிரயை செல்லப்பிராணியாக வளர்த்துள்ளனர். அமெரிக்காவின் டென்னசி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த வரிக்குதிரை வளர்க்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் அது வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளது. அவ்வாறு வீட்டில் இருந்து வெளியேறிய அந்த வரிக்குதிரை அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று அட்டகாசம் செய்துள்ளது.

காட்டுக்குள் இருக்க வேண்டிய வரிக்குதிரை குடியிருப்பு பகுதிக்குள் வந்து அட்டகாசம் செய்யவே அது தொடர்பாக காவல்துறைக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அதுமட்டுமன்றி, அந்த வரிக்குதிரையின் அட்டகாசங்கள் தொடர்பான மீம்களும் சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கியுள்ளன. இந்த நிலையில், வரிக்குதிரையை பிடிக்க முடிவு செய்த அதிகாரிகள் அதனை ஹெலிக்காப்டர் உதவியுடன் பிடித்து வந்துள்ளனர்.

வரிக்குதிரையை ஹெலிக்காப்டரில் கட்டி தூக்கி வந்த அதிகாரிகள்

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட வரிக்குதிரை ஒன்று அந்தரத்தில் பறந்துக்கொண்டு இருக்கிறது. ஒரு ஹெலிக்காப்டரின் ஸ்டாண்டில் வலை கட்டபட்டு அதில் அந்த வரிக்குதிரை அமர வைத்து அழைத்துச் செல்லப்படுகிறது. பிறகு உரிய இடம் வந்ததும் ஹெலிக்காப்டர் மெதுவாக வரிக்குதிரையை கீழே இறக்குகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us