Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : நியூயார்க்கில் ஒரு குட்டி இந்தியா.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வீடியோ!

Viral Video of Indian Square in Newyork | இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களுக்கு இந்திய உணவு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பிரிந்திருக்க முடியாது. ஆனால், நியூயார்க்கின் இந்த பகுதிக்கு சென்றால் அதை குறித்தெல்லாம் கவலைப்பட தேவையே இல்லை. அச்சு அசல் அப்படியே இந்தியாவை போலவே உள்ளது அந்த பகுதி.

Viral Video : நியூயார்க்கில் ஒரு குட்டி இந்தியா.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Jun 2025 18:27 PM

பொதுவாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள், இந்தியாவை அதிகம் மிஸ் செய்வார்கள். காரணம் அந்த நாட்டில் வேறுபட்ட உடை, கலாச்சாரம், உணவு என அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். ஏன் இந்தியர்களை பார்த்து தங்களது மொழியில் கூட பேசிக்கொள்ள முடியாது என்பதுதான் பலருது கவலையாக இருக்கும். ஆனால், நியூயார்க்கின் ஒரு பகுதியில் அது முற்றிலும் மாறுபட்டுள்ளது. அங்கு எங்கு திரும்பினாலும் இந்தியர்கள் உள்ளனர். இந்தியர்கள் மட்டுமா, இந்தியாவில் உள்ளதை போலவே சாலையில் இரண்டு புறங்களிலும் இந்திய துணிக்கடைகள், உணவகங்கள் என அனைத்தும் உள்ளன. இவற்றை இளைஞர் ஒருவர் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

நியூயார்க்கில் ஒரு குட்டி இந்தியா – ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ

இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளன. கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடுகளுக்கு செல்லும் அவர்கள், பணி முடிந்ததும் இந்தியாவுக்கு திரும்பி விடுவர். ஒருசிலர் அந்த நாடுகளிலேயே தங்கி விடுவர். அவ்வாறு, இந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு எல்லாம், சொந்த ஊரையும் அதன் இயல்பையும் மறக்கவே முடியாது. இந்த நிலையில், எங்கு வாழ்ந்தாலும் இந்தியாவில் வாழும் உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக நியூயார்க்கின் ஒரு பகுதியையே குட்டி இந்தியாவாக மாற்றி வைத்துள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் குட்டி இந்தியாவின் வியக்க வைக்கும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் வெளிநாட்டின் சாலையில் நின்றுக்கொண்டு இருக்கிறார். ஆனால், அது பார்ப்பதற்கு அச்சு அசல் இந்தியாவை போலவே உள்ளது. சாலையில் இரண்டு பக்கங்களிலும் இந்திய உணவகங்கள், தின்பண்ட கடைகள், துணிக்கடைகள் என இந்தியாவில் ஒரு கடை வீதி எப்படி இருக்குமோ அப்படியேஎ உள்ளது. இது நியூயார்க்கில் உள்ள ஜெர்ச்சில் சிட்டியில் அமைந்துள்ள India Square. இங்கு அதிகமான இந்தியர்கள் வசிப்பதால், இந்தியர்களுக்கு ஏற்ற வகையில் அங்கு கடைகள், உணவகங்கள் என அனைத்துமே அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.