AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : தன்னை காப்பாற்றிய ஜேசிபிக்கு நன்றி தெரிவித்த யானை.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

Elephant Calf Thanks JCB for Rescue | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் யானை குட்டி ஒன்று தன்னை காப்பாற்றிய ஜேசிபிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொட்டுவிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Viral Video : தன்னை காப்பாற்றிய ஜேசிபிக்கு நன்றி தெரிவித்த யானை.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Jun 2025 22:01 PM IST

விலங்கு இனங்களிலேயே மிகவும் உணர்ச்சிமிக்க உயிரனமாக உள்ளது தான் யானை. யானைகள் மனிதர்களை போலவே மிகவும் பாசமானவையாக இருக்கும். இதனை உணர்த்தும் விதமாக அவ்வப்போது இணையத்தில் சில வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பள்ளத்தில் இருந்து தன்னை காப்பாற்றிய ஜேசிபி வாகனத்திற்கு நன்றி கூறும் வகையில் அதனை சில நொடிகள் தொட்டு விட்டு செல்லும் குட்டி யானையின் வீடியோ தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் மிகவும் ஆச்சர்யத்துடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தன்னை காப்பாற்றிய ஜேசிபி வாகனத்தை தொட்டுவிட்டு சென்ற யானை குட்டி

யானைகள்  உருவத்தில் மிக பெரியவையாக இருப்பது மட்டுமன்றி, அவை எடையிலும் மிக அதிகமானவை. பூமியில் வாழும் மிகப்பெரிய உயிரினங்களில் அதுவும் ஒன்று. இந்த நிலையில், யானைகள் ஏதேனும் பள்ளத்தில் விழுந்துவிட்டால் அவற்றால் வெளியே வர முடியாது. அவற்றின் அதிக எடை இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் பள்ளத்திலோ அல்லது குழுகளிலோ விழுந்த யானைகளை வனத்துறையினர் சென்று தான் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி மீட்பர். அந்த வகையில், பள்ளத்தில் சிக்கிய குட்டி யானையை மீட்கும் போது நடந்த சுவாரஸ்ய சம்பவத்தின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பள்ளத்தில் சிக்கியிருக்கும் குட்டி யானை ஒன்றை வனத்துறையினர் ஜேசிபி வானகத்தின் உதவியுடன் மீட்கின்றனர். அப்போது பள்ளத்தில் இருந்து வெளியே வரும் யானை குட்டி, சில நொடிகள் அந்த ஜேசிபி வாகனத்தை தொட்டி நன்றி செலுத்தவதை போல் நின்றுவிட்டு மேலே ஏறி காட்டுக்குள் ஓடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மனிதர்களை விட அந்த குட்டி யானைக்கு அதிக பண்புகள் உள்ளதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த யானையின் செயல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளதாக மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us