Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த நபர் – அடுத்த என்ன ஆச்சு தெரியுமா?

Selfie Gone Wrong : இன்றைய இளைஞர்கள் தாங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என கடுமையாக முயற்சித்து சாகசங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இளைஞர் ஒருவர் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்று பெரும் பாதிப்பை சந்தித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Viral Video : ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த நபர் – அடுத்த என்ன ஆச்சு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 09 Jun 2025 13:41 PM

சமூக ஊடகங்களில் தங்களை ஹீரோக்களாகக் காட்டிக்கொள்ள மக்கள் பெரும்பாலும் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒருபுறம் மக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினாலும், சிலர் இதுபோன்ற ஸ்டண்ட்களை ஆபத்தை உணராமல் மேற்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நபரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் இளைஞர் ஒருவர் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி வீடியோ எடுத்தபடி வருகிறார். இதனை அவரது நண்பர் மற்றொரு புறம் இருந்து வீடியோ எடுப்பது போல தெரிகிறது. இந்த நிலையில் எதிர்பாராத சம்வபம் நடக்கிறது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைகிறார்.  அப்போது அவர் கொடுக்கும் ரியாக்ஷன்கள் தான் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

மக்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. தங்கள் ரீல்ஸ் வைரலாக வேண்டும் என்பதற்காக மக்கள் வி்த்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சிலர் உயருக்கு ஆபத்தான முறையில் ஸ்டண்ட்களிலும் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் ஓடும் ரயிலில் ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்கள் குறித்த செய்திகளை அடிக்கடி செய்திகளில் பார்த்திருப்போம். ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயற்சித்து பாதிப்புக்குள்ளாகும் ஒரு நபரின் வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

 

அந்த வீடியோவில், ஒரு நபர் ரயிலின் வாசலில் நின்றுகொண்டு தன்னைத்தானே செல்ஃபி எடுத்துக்கொள்வதைக் காணலாம். அவர் ரயில் வேகமாக பயணிக்கும்போது செல்ஃபி எடுக்க முயல்கிறார். ஸ்டைலாக தலை முடியைக் கோதிய படி அவர் வீடியோ எடுக்கிறார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் கையில் இருக்கும் போன் அவர் கைகளில் இருந்து நழுவி கீழே விழுகிறது. இதனையடுத்து அவர் அதிர்ச்சியில் அவர் கொடுக்கும் ரியாக்சன்கள் தான் வீடியோவின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. அவர் பதறியபடி தனது நண்பரிடம் தனது போன் கீழே விழந்ததை சொல்கிறார். இதனை மற்றொரு கதவின் வழியாக நின்று வீடியோ எடுக்கிறார். ஒருவேளை அவர் போனை தவறவிடுவது அவருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்குமோ எப்படி சரியாக இந்த நிகழ்வை அவர் தனது போனில் பதிவி செய்திருக்கிறார் என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த வீடியோ @BhanuNand என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்களால் விரும்பி பார்க்கப்பட்டுள்ளது. இதனுடன், மக்கள் இது குறித்து வேடிக்கையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அவர் ரயில் சாகசம் செய்து ரீல்ஸாக அப்லோடு செய்து வரைலாக வேண்டும் என்று நினைத்திருப்பார். ஆனால் தான் இப்படி வைரலாவோம் என அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார். மற்றொருவர், இனி அவர் தன் வாழ்நாளில் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் யோசிப்பார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.