AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!

Crow Plays Football With Little Boy | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், காகம் ஒன்று சிறுவனுடன் இணைந்து கால்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சுவாரஸ்யமான இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : சிறுவனுடன் கால்பந்து விளையாடும் காகம்.. இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Jun 2025 14:12 PM IST

விலங்குகள் மற்றும் பரவைகளுக்கு மனிதர்களை விட அறிவு குறைவாக தான் இருக்கும். மனிதர்களுக்கு 6 அறிவு என்றால், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு 5 அறிவு மட்டுமே உள்ளன. இவ்வாறு அறிவு வித்தியாசத்தின் அடிப்படையில் உலகில் உயிரினங்கள் பிரிக்கப்படுகின்றனர். பறவைகள் மற்றும் விலங்குகள் மனிதர்களிடம் இருந்து வித்தியாசமான தோற்றம் மற்றும் குணங்களை கொண்டிருப்பதால் அவை முற்றிலும் வேறுபட்ட உயிரினங்களாக உள்ளன. ஆனால், காகம் ஒன்று மனிதர்களை போல கால்பந்து விளையாடுகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா. உண்மை தான், காகம் ஒன்று சிறுவனுடன் இணைந்து கால்பந்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் காகத்தின் வீடியோ

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான மற்றும் வியக்கத்தக்க வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், காகம் ஒன்று சிறுவனுடன் கால்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Sagil (@chakdefootball)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ கோவாவில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் சிறிய பந்தை காலால் உதைத்து விளையாடுகிறான். அப்போது அவனுக்கு எதிரில் இருக்கும் காகம் ஒன்று அந்த பந்தை தானும் தனது அலகாள் தள்ளிவிடுகிறது. ஒருமுறை தான் காகம் அந்த பந்தை தள்ளிவிடுகிறது என பார்த்தால் ஒவ்வொரு முறை சிறுவன் பந்தை தனது காலால் உதைத்து தள்ளும்போதெல்லாம் காகம் அதேபோல மீண்டும் பந்தை தனது அலகால் சிறுவனிடம் தள்ளிவிடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அது குறித்து கூறியுள்ள ஒருவர் காகங்களுக்கு இவ்வளவு அருமையாக கால்பந்து விளையாட தெரியும் என தனக்கு இப்போதுதான் தெரியும் என்று கூறியுள்ளார். இந்த காகம் போன ஜென்மத்தில் கால்பந்து விளையாட்டு வீரராக பிறந்திருக்கும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us