AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாட்ஜிபிடி மூலம் போலியாக சாலையை உருவாக்கி ஏமாற்றிய காண்டிராக்டர்? – வைரலாகும் வீடியோ

ChatGPT Construction Scam : சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி ஏமாற்று வேலையில் ஈடுபடும் காண்டிராக்டர் குறித்து வீடியோ வைரலாகி வருகிறது. அதில் காண்டிராக்டர் ஒருவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி புதிதாக சாலை போடப்பட்டது போன்ற போட்டோவை காண்டிராக்டர் உருவாக்குகிறார். இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி தத்ரூபமாக ஒரு சாலையை உருவாக்கியிருக்கும் சம்பவம் பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சாட்ஜிபிடி மூலம் போலியாக சாலையை உருவாக்கி ஏமாற்றிய காண்டிராக்டர்? – வைரலாகும் வீடியோ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Jun 2025 20:07 PM IST

செயற்கை நுண்றிவு எனப்படும் ஏஐ (AI) டூல்கள் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கி விட்டது. மிகவும் கடினமான வேலைகளை கூட ஏஐ மூலம் மிகவும் எளிதாக  செய்ய முடிகிறது. குறிப்பாக சில நிமிடங்களில் ஒரு வேலையை செய்ய முடிகிறது. எதிர்காலத்தில் இதனால் வேலை பறிபோகும் சூழ்நிலை ஏற்படும் என ஒரு பக்கம் கூறப்பட்டாலும், ஏஐ கருவிகளை சரியாக பயன்படுத்தினால் எதிர்காலம் பிரகாசாக இருக்கும் எனவும் மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் ஏஐ கருவிகளை வைத்து பலரும் மோசடி செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   அந்த வகையில் கர்நாடகாவில் (Karnataka) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) பெயரில் போலி ஏஐ வீடியோ மூலம் 200க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி  செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்படி ஒரு ஏமாற்று சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோவில், ஒரு ரோடு காண்டிராக்டர் யாரும் கற்பனை செய்து பார்க்காத வகையில் சாட்ஜிபிடியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.  காண்டிராக்டர் ஒருவர் சாலை போடுவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் சாலை போடுவதற்கு பதில் பழைய சாலையின் போட்டோவை வைத்து புதிதாக சாலை போடப்பட்டது போல சாட்ஜிபிடியில் போலியாக ஒரு போட்டோவை உருவாக்கியிருக்கிறார்.

சாட்ஜிபிடி மூலம் பொறியாளரை ஏமாற்றிய காண்டிராக்டர்

 

 

View this post on Instagram

 

A post shared by NAUGHTYWORLD (@naughtyworld)

தத்ரூபமாக உருவாக்கப்பட்ட சாலை

அவர் அத்துடன் நிற்கவில்லை. சாட்ஜிபிடி மூலம் உருவாக்கப்பட்ட போட்டோவை பொறியாளருக்கு அனுப்பி,  சாலை போடப்பட்டதாக கூறுகிறார். இதனையடுத்து அவர் காண்டிராக்டரை பாராட்டியிருக்கிறார். வீடியோவின் உண்மை தன்மை குறித்து தெரியவில்லை. ஆனால் போட்டோ உண்மையான சாலை போல தத்ரூபமாக இருக்கிறது. இது நிஜமாக நடைபெற்றதா? அல்லது கற்பனைக்காக உருவாக்கப்பட்டதா? என்பது குறித்து வீடியோவில் விளக்கமில்லை.

வீடியோவில், ஒரு ஒப்பந்ததாரர் கிராமத்தின் செப்பனிடப்படாத சாலையை புகைப்படம் எடுப்பதை நீங்கள் காணலாம். அதன் பிறகு, அதை ஒரு புதிதான சாலை போல மாற்றுமாறு சாட்ஜிபிடியிடம் பிராம்ப்ட் செய்கிறார். அதைக் கேட்டதும் சாலையை புதிய கான்கிரீட் சாலையாக மாற்றி காண்டிராக்டருக்கு அனுப்புகிறது. அது நிஜமான சாலையை போல இருக்கிறது. பின்னர் அவர் தனது பொறியாளருக்கு அனுப்ப அவர் சாலையை பார்த்து ஒப்புதல் வழங்கும் விதமாக தம்ஸ்அப் காட்டுகிறார். இதன் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை. ஆனால் சாட்ஜிபிடி ஒரிஜினலாக ஒரு சாலையை உருவாக்குவதைப் பார்த்தால் நிஜத்தில் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது.  இந்த காணொளியை naughtyworld என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.. இது மில்லியன் கணக்கானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.   மேலும் பலர் கமெண்டில் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us