Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video: அய்யயோ எப்படி நடந்திருக்கும்? பெண்ணின் காதில் நுழைந்த பாம்பு.. வைரலாகும் வீடியோ!

Snake in Womans Ear : பெண்ணின் காதில் பாம்பு நுழைந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாம்பின் வால் மட்டுமே வெளியே தெரிய, பெண் வலியில் துடிப்பது வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பாம்பு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் இணையத்தில் பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது.

Viral Video: அய்யயோ எப்படி நடந்திருக்கும்? பெண்ணின் காதில் நுழைந்த பாம்பு.. வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Barath Murugan
Barath Murugan | Published: 30 May 2025 20:30 PM

தற்போதுள்ள காலகட்டத்தில் இணையதளங்களில் வளர்ச்சி (Development on websites)  அதிகரித்து வரும் நிலையில், மக்களின் கையில் அணைத்து விஷயங்களும் எளிதாக வந்துவிடுகிறது. அந்த வகையில் இணையத்தளங்களில் அவ்வப்போது வீடியோக்கள் வைரலாகி வருவது உண்டு. அந்த வகையில் பெண் (Women)  ஒருவரின் காதில் பாம்பு  (Snake in the ear) ஒன்று நுழைந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் காதில் எப்படி பாம்பு உள்ளே சென்றிருக்கும் என்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் பெண் ஒருவரின் கையில் பாம்பு ஒன்று நுழைந்திருக்கிறது. அதை மற்றொரு நபர் தனது போனில் படம்பிடித்துள்ளார். பொதுவாகப் பாம்புகளைப் பொறுத்தவரை அவைகள் குளிர்ச்சியான இடங்களில் இருப்பதற்கு ஆசைப் படுபவை. மேலும் அவைகள் மனிதர்களை எந்த வகையிலும் சீண்டாது. அதை நாம் சீண்டாதவரைக்கும் எதுவும் செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பாம்பு ஒன்று எவ்வாறு அந்த பெண்ணின் காதில் நுழைந்திருக்கும் என்று சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த பெண்ணின் காதில் பாம்பின் வால் மட்டுமே வெளியில் தொங்குகிறது. அதை மற்றொரு நபர் ஒரு இடுக்கியை வைத்து இழுக்க முயற்சி செய்வதுபோல் இருக்கிறது. ஆனால் அந்த பெண் வழியில் அழுவதுபோல் இருக்கிறது.

தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவானது கடந்த 2025, ஏப்ரல் மாதத்தின் இறுதியில் வெளியாகியிருக்கிறது. ஆனால் தற்போது இணையத்தில் புயலாகப் பரவி வருகிறது. மேலும் பல பயனர்கள் வீடியோவின் கீழ் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :

 

 

View this post on Instagram

 

A post shared by Mike Holston (@therealtarzann)

இந்த வீடியோவில், ஒரு பெண் காதில் பாம்பின் வால் இருப்பதை நீங்கள் காணலாம். அது எப்படி நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் பாம்பு அவள் காதில் முழுவதுமாக நுழையாமல் பாதி நுழைந்து, பாதி வால் வெளியில் தொங்கியபடி உள்ளது. அதன் காரணமாக அந்தப் பெண் வலியால் அலறியபடி இந்த வீடியோவில் உள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், குட்டி பாம்பு வெளியே எடுக்க முடியவில்லையாம். கடைசியாக, மருத்துவர் ஒரு இடுக்கி போன்ற ஒரு கருவியை வைத்து எடுத்து பாம்பின் வாலை வெளியே இழுக்க முயன்றார். வீடியோவில், அதன் வாலைப் பிடித்து வெளியே இழுப்பதைக் காணலாம்.

வைரலாகும் வீடியோவின் கீழ் பயனர்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர் “பாம்பு ஒன்று காதில் நுழையும் வரை அந்த பெண் என்ன செய்துகொண்டிருந்தார். இல்லை அவரேதான் பாம்பைக் கட்டத்தில் நுழைத்தார் என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “இது எவ்வளவு கொடூரமான விஷயம் பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் .