Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : 7 நாட்கள் Trip-க்கு 100 உடைகளை பேக் செய்த மனைவி.. ஷாக் ஆன கணவன்!

Woman Packs 100 Outfits for 7-Day Trip | பொதுவாக சுற்றுலா செல்லும்போது எத்தனை நாட்கள் பயணம் செய்கின்றோமோ அத்தனை நாட்களுக்கு தேவையான உடை, வேண்டும் என்றால் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு உடை எடுத்துச்செல்வோம். ஆனால், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் பெண் ஒருவர் 7 நாட்கள் சுற்றுலாவுக்கு 100 உடைகளை பேக் செய்துள்ளார்.

Viral Video : 7 நாட்கள் Trip-க்கு 100 உடைகளை பேக் செய்த மனைவி.. ஷாக் ஆன கணவன்!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 10 Jun 2025 15:32 PM

ஆண்களை விட பெண்கள் தங்களது உடை மற்றும் அலங்காரத்தில் சற்று கவனத்துடன் இருப்பர். எங்கேனும் வெளியே செல்லும்போதும், வெளி ஊர்களுக்கு பயணம் செய்யும்போதும் அவர்கள் விதவிதமான உடைகளை எடுத்துச் செல்வார்கள். இவ்வாறு பெண்களுக்கு உடைகள் மற்றும் அலங்காரத்தின் மீது இருக்கும் அதீத பற்று குறித்து ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் தங்களது ஒரு வார பயணத்திற்காக ஒரு அறை முழுவதும் சுமார் 100 உடைகளை அடுக்கி வைத்திருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் பெண்களின் கணக்கை புரிந்துக்கொள்ளவே முடியவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரு வார பயணத்திற்கு 100 உடைகளை பேக் செய்த பெண்

பொதுவாக எங்கேனும் வெளி ஊர்களுக்கு பயணம் செய்யும்போது, தேவையான அனைத்து பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். உடைகளை பொருத்தவரை எப்போதும் கூடுதலாக எடுத்து செல்ல வேண்டும். காரணம், எப்போது வேண்டுமானாலும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படலாம், பயண நாட்கள் நீடிக்கலாம். இப்படி பல காரணங்களுக்காக பலரும் கூடுதலாக உடைகளை எடுத்துச் செல்வர். ஆனால், பெண் ஒருவர் தங்களது 7 நாட்கள் பயனத்திற்காக 100 உடைகளை பேக் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Ashley Hartig (@ashley.hartig)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது கணவரை ஒரு அறைக்கு அழைத்து செல்கிறார். அந்த அறை முழுவதும் உடைகளால் நிறைந்துள்ளது. அப்போது அந்த பெண், நமது பயணத்திற்காக 100 உடைகளை பேக் செய்துள்ளேன் என்று கூறுகிறார். அதை கேட்டதும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் அந்த பெண்ணின் கணவர், நாம் வெறும் 7 நாட்கள் தான் சுற்றுலா செல்ல உள்ளோம், அதற்கு ஏன் 100 உடைகள் என கேட்கிறார். அதற்கு அந்த பெண், இது 5 பேருக்கான உடைகள் என கூறுகிறார்.

இருப்பினும் ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் கணவர், உணக்கு மூளையில் ஏதோ பிரச்னை உள்ளது என கிண்டலாக கூறுகிறார். ஆனால் அவற்றை எல்லாம் கண்டுக்கொள்ளாத அந்த பெண் இந்த 100 உடைகளையும் எனக்கு 2 பெட்டிகளில் அடுக்கி தர வேண்டும் என கூறுகிறார். அதனை கேட்டு அவரது கணவர் மீண்டும் அதிர்ச்சியாகிறார். ஆனாலும், அந்த பெண் அனைத்து உடைகளையும் 2 பெட்டிகளில் அடுக்க வேண்டும் என கூறுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?
இனி வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்னை இருக்காது - எப்படி?...
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்..
விஜய் தனித்து போட்டியிட வேண்டும் - திருமாவளவன்.....
 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
 ஈரான் மீது  தாக்குதல் நடத்திய இஸ்ரேல்...
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!
விஜய் சேதுபதி - ருக்மினி வசந்தின் 'ஏஸ்' படம் ஓடிடியில் வெளியானது!...
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்
மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 எப்போது தொடங்குகிறது? வைரலாகும் அப்டேட்...
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா
ஜி.வி.பிரகாஷிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா...
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...