Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பயமா? எனக்கா?.. அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!

Man Calmly Films King Cobra | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் மீது ஊர்ந்து செல்லும் ராஜ நாகத்தை அமைதியாக வீடியோ பதிவு செய்யும் நபரின் வீடியோ தான் அது.

Viral Video : பயமா? எனக்கா?.. அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Published: 24 May 2025 13:06 PM

பாம்பு என்றால் படையும் நடங்கும் என்று சொல்வார்கள். ஆனால், இங்கு ஒரு நபர் மிகவும் கொடிய விஷன் கொண்ட ராஜ நாகத்தை (King Cobra) கண்டு மிகவும் அமைதியாக இருக்கிறார். அவரது முகத்தில் பயமோ, கலக்கமோ இல்லை. மாறாக அவர், அந்த பாம்பு தன் மீது ஊர்ந்து செல்வதை தனது ஸ்மார்ட்போன் மூலம் வீடியோ பதிவு செய்கிறார். அவர் பதிவு செய்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அது தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் பலரும் அந்த நபருக்கு பயமே இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமைதியாக அறைக்குள் நுழைந்த ராஜ நாகம் – பயப்படாமல் படுத்திருந்த நபர்

உத்தரகாண்டில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம் நுழைந்துள்ளது. கடித்த உடன் ஒருசில நொடிகளிலேயே உயிர் போய்விடும் கொடிய விஷம் கொண்ட பாம்பு அது. ஆனால், பாம்பு தனது அறைக்குள் நுழைந்ததை கவனித்த அந்த நபர் மிகவும் அமைதியாகவும், பயமின்றியும் அந்த ராகநாகத்தை கையாண்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாத உள்ளது. இந்த நிலையில், வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ – ஷாக்கான நெட்டிசன்கள்

 

View this post on Instagram

 

A post shared by Inside History (@insidehistory)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒருவர் தனது வீட்டின் அறையில் படுத்துக்கொண்டு இருக்கிறார். அப்போது வீட்டிற்குள் வரும் ராஜ நாகம் அந்த நபரின் கால் மீது ஏறி ஊர்ந்து செல்கிறது. ஆனால் அந்த நபரோ எந்த வித பயமும் இல்லாமல் அமைதியாக படுத்துக்கொண்டு அந்த ராஜநாகம் எங்கெல்லாம் செல்கிறதோ அதனை தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த நபருக்கு பயமே இல்லை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இவர் தான் உண்மையான மேன் Vs வைல்ட் (Man Vs Wild) என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை அந்த வீடியோவுக்கு கீழ் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்
மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களில் 61,000 பேர் பணி நீக்கம்...
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? - இந்த 4 விஷயங்களை மறக்காதீங்க!...
கேம் சேஞ்சர் பட ரன்னிங் டைம் 7.5 மணிநேரம் - எடிட்டர் ஷமீர்!
கேம் சேஞ்சர் பட ரன்னிங் டைம் 7.5 மணிநேரம் - எடிட்டர் ஷமீர்!...
ஓய்வு முடிவை கோலி எப்போது எடுத்தார்? அஜித் அகர்கர் விளக்கம்!
ஓய்வு முடிவை கோலி எப்போது எடுத்தார்? அஜித் அகர்கர் விளக்கம்!...
கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?
கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா?...
Claude 4 Opus: தவறு செய்தால் போலீஸிடம் போட்டுக்கொடுக்கும் ஏஐ -
Claude 4 Opus: தவறு செய்தால் போலீஸிடம் போட்டுக்கொடுக்கும் ஏஐ -...
கோவையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
கோவையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்!...
புதிதாக 'யூடியூப் சேனல்' தொடங்கிய நடிகர் அஜித் குமார்!
புதிதாக 'யூடியூப் சேனல்' தொடங்கிய நடிகர் அஜித் குமார்!...
ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!
ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!...
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?...