AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : ஆபத்தான முறையில் காரில் Stunt செய்த இளைஞர்கள்.. இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ!

Reckless Car Stunt of Youngsters Spark Outrage | சாலையில் வாகனம் ஓட்டும்போது சக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், சீரான வேகத்தில் செல்ல வேண்டும் என்ற கட்டுபாடுகள் உள்ளன. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் காரில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : ஆபத்தான முறையில் காரில் Stunt செய்த இளைஞர்கள்.. இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Jun 2025 14:59 PM IST

உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலையில் இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், ஆபத்தான முறையில் காரை ஓட்டிச் சென்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆபத்தான முறையில் கார் ஓட்டிய இளைஞர்கள்

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ளா பார்க் நகரில் இளைஞர்கள் சில மிகவும் ஆபத்தான வகையில் கார் ஓட்டிச் சென்றுள்ளனர். ஜிஎல் பாலாஜி கல்லூரிக்கு வெளியே அவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்துள்ளனர். பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் கார் ஓட்டிய அந்த இளைஞர்களின் வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் இளைஞர்களின் கார் ஸ்டண்ட் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர்கள் சிலர் வாகனங்கள் சென்றுக்கொண்டு இருக்கும் சாலையில், மிக வேகமாக கார் ஓட்டுகின்றனர். மூன்று காரில் மிக வேகமாக செல்லும் இளைஞர்கள் எதிரே வரும் கார்கள் மற்றும் வாகனங்கள் மீது மோதும் வகையில் காரை ஓட்டுகின்றனர். அதுமட்டுமன்றி, காரின் ஜன்னல் வழியாக எட்டி பார்ப்பது, காரின் மீது ஏறி நின்று அட்டகாசம் செய்வது என சில செயல்களையும் அவர்கள் செய்கின்றனர்.

அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலான நிலையில், இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்து வந்ததது. இந்த நிலையில், கார்களின் வாகன எண்ணை வைத்து அந்த கார்களுக்கு நொய்டா போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்துள்ளது. மூன்று கார்களின் ஒரு காருக்கு ரூ.63,000 மற்றும் இரண்டு கார்களுக்கு ரூ.57,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us