முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 70 வயதில் திருமணம் செய்துக்கொண்ட ஜோடி.. சுவாரஸ்ய சம்பவம்!
70 Year Olds Find Love in Old Age Home | 30 வயதுகுள்ளாக திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் நிலையில், கேரளாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர்கள் இருவர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

திருவனந்தபுரம், ஜூலை 11 : கேரளாவில் (Kerala) முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 70 வயது முதியவர்கள் இருவர் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவுகளை இழந்து முதியோர் இல்லத்தில் வசித்து வந்த முதியவர்களுக்கு இடையே காதல் மலர்ந்த நிலையில், அவர்கள் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில், மன பொருத்தம் ஏற்பட்டு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், முதியோர் இல்லத்தில் 70 வயது ஜோடி திருமணம் செய்துக்கொண்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதியோர் இல்லத்தில் திருமணம் செய்துக்கொண்ட 70 வயது ஜோடி
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருபவர்கள் தான் 72 வயதான கோவிந்த நாயர் மற்றும் 70 வயதான சரஸ்வதி. இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக ஒரே முதியோர் இல்லத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், அதுவே இருவருக்கும் இடையிலான உறவே காதலாக மாற்றி உள்ளது. இந்த நிலையில், இருவரும் தங்களுக்குள் இருந்த உணர்வுகளை ஒருவரிடம் மற்றொருவர் வெளிப்படுத்திக் கொண்ட நிலையில், திருமணம் செய்து ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க : 6 மாதங்கள் 9 மணி நேரம் தூங்கி ரூ.9 லட்சம் பரிசு வென்ற இளம் பெண்.. எப்படி?
70 வயதில் புதிய வாழ்க்கையை தொடங்கிய காதல் ஜோடி
திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்த இந்த முதிய ஜோடி, தங்கள் விருப்பத்தை முதியோர் இல்ல நிர்வாகத்திடம் தெரிவித்துது. நிர்வாகமும் அவர்களது முடிவுக்கு வரவேற்பு அளித்த திருமணம் செய்து வைக்க முன்வந்துள்ளது. அதன்படி, முதியோர் இல்ல நிர்வாகத்தின் ஆதரவுடன் முதியோர் இல்லத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நண்பர்கள், முதியோர் இல்லத்தில் இருந்த மற்றவர்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர். இந்த திருமணம் அங்கிருந்த அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனிதர்களாக பிறந்த யாராலுமே காதலிக்காமல் இருக்க முடியாது. காதல் இந்த வயதில் தான் வரும் எனவும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சாதி, மதம், வயது, நிறம் ஆகியவற்றை கடந்து ஏற்படுவதுதான் காதல். இத்தகைய உண்ணதமான உணர்வை அடைந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் அதிஷ்டசாலிகள் தான். காதல் எப்போது யாரை வந்தடையும் என்று சொல்ல முடியாது. அந்த வகையில், முதியோர் இல்லத்தில் வசித்து வந்த முதியவர்கள் தங்களது 70வது வயதில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.