Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : இது ஆட்டோவா இல்ல நூலகமா?.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ!

Auto Driver Turns Auto into Mini Library | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான மற்றும் வியக்கத்தக்க வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்கள் வியப்பை ஏற்படுத்தும் நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை மினி நூலகமாக மாற்றி வைத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : இது ஆட்டோவா இல்ல நூலகமா?.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Jul 2025 22:23 PM

பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை சூழலில் மனிதர்களுக்கு சில விஷயங்களை செய்ய நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு பயணம் செய்வதிலேயே பாதி நேரம் போய்விடுகிறது. உதாரணமாக வீட்டில் இருந்து அலுவலகம் 10 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே இருந்தாலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக அங்கு செல்வதற்கு அறை மணி நேரம் வரை ஆகும். இந்த நிலையில், பயண நேரத்தை பொதுமக்கள் பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும் என்பதற்காக பெங்களூரு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மிகவும் வித்தியாசமான மற்றும் பாராட்டுக்குறிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆட்டோவை மினி நூலகமாக மாற்றிய ஓட்டுநர்

பெரும்பாலான பொதுமக்கள் ஓலா மற்றும் ஊபர் செயலிகளை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர். அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் இந்த போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் நிலையில், அதனை பயன்படுத்திக்கொண்டு சில ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதலாக கட்டணம் கேட்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மத்தியில் ஊபர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை மினி நூலகமாக மாற்றி வைத்துள்ளார். அவரின் இந்த முன்னெடுப்பு பாராட்டை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : காணாமல் போன நிலையில், மீண்டும் தாயுடன் இணைந்த குட்டி யானை.. இணையத்தில் வைரலாகும் பாச போராட்ட வீடியோ!

இணையத்தில் வைரலாகும் ஆட்டோவின் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் ஊபர் செயலில் ஆட்டோ முன்பதிவு செய்து பயணம் செய்கிறார். அப்போது அவர் மிகவும் வியக்கத்தக்க ஒரு சம்பத்தை பார்க்கிறார். அதாவது, அந்த ஆட்டோ முழுவதும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் வாழ்வியலுக்கு தேவையான புத்தகங்கள், மன அமைதி மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான புத்தகங்கள் என பல வகையான புத்தகங்களை அவர் அதில் அடுக்கி வைத்துள்ளார். அவரின் அந்த செயலை பாராட்டி பலர் சிறு காகிதத்தில் தங்களது கருத்துக்களை எழுதி அதன் கீழ் தொங்க வைத்துள்ளனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசனகள் கருத்து

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பயணங்களின் போது மொபைல் போனை பயன்படுத்தும் நம்மை பயனுள்ள வேலையை செய்ய தூண்டும் அந்த ஆட்டோ ஓட்டுநரை பாராட்ட வேண்டும் என்று ஒருவர் கருத்து பகிர்ந்துள்ளார். இனி நான் எப்போதும் ஆட்டோவில் பயணம் செய்வேன் என்று மற்றொருவர் கூறியுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.