Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்த ஆண் கொரிலா.. Possessive ஆன பெண் கொரிலா.. கியூட் வீடியோ!

Female Gorilla's Jealous Rage | பொதுவாக பெண்களுக்கு தங்களுக்கு மிகவும் பிடித்த ஆண்கள் மற்றும் நெருக்கமான ஆண்கள் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவது பிடிக்காது. அந்த வகையில், பெண் கொரிலா ஒன்று ஆண் கொரிலா பெண் புகைப்பட கலைஞரின் முடியை பிடித்து இழுத்ததும் கோபத்தில் ஆண் கொரிலாவை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்த ஆண் கொரிலா.. Possessive ஆன பெண் கொரிலா.. கியூட் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Jul 2025 22:27 PM

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான பழக்கங்கள் சில இருக்கும். அதிலும் குரங்கு வகை விலங்குகள் அச்சு அசல் மனிதர்களை போலவே நடந்துக்கொள்ளும். கைகளால் உணவு உள்ளிட்ட பழ வகைகளை சாப்பிடுவது, நடப்பது, குட்டிகளை தூங்கி சுமப்பத்து உள்ளிட்ட பல அம்சங்கள் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒத்துபோகும். செயல்பாடுகளில் மட்டும்தான் குரங்குகள் மனிதர்களோடு ஒத்துபோகும் என கருத்து உள்ள நிலையில், குணாதிசயங்களிலும் குரங்குகள் மனிதர்களுடன் ஒத்துபோகின்றன. அத்தகைய வீடியோ ஒன்றுதான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்த ஆண் குரங்கு

பொதுவாக பெண்களுக்கு தங்களுக்கு மிகவும் நெருக்கமான ஆண்களுடன் தங்களை தவிர வேறு ஒரு பெண் பேசுவது, பழகுவது பிடிக்காது. அந்த ஆண் காதலனாகவோ, கணவனாகவோ, நண்பனாகவோ இருந்தாலும் கூட அவர்கள் வேறு பெண்களுடன் பேச அனுமதி வழங்க மாட்டார்கள். அதனையும் மீறி அந்த ஆண் வேறு ஒரு பெண்ணிடம் பேசி, சிரித்துவிட்டால் போதும் அவர்களுக்கு தலைக்கு மேல் கோபம் வந்துவிடும். இதன் காரணமாக சில கணவன் மனைவி மற்றும் காதலர்கள் இடையே தகராறு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

மனிதர்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்னை என்றால் விலங்குகளும் இந்த பிரச்னைகளை எதிர்க்கொள்கின்றன. அதாவது, இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் பெண் ஒருவர் கொரிலாவை புகைப்படம் எடுக்கிறார். அப்போது அந்த கொரிலா  பெண்ணின் தலை முடியை பிடித்து இழுக்கும் நிலையில், கோபமடைந்த பெண் கொரிலா ஆண் கொரிலாவை தாக்குகிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : திடீரென வானத்தில் தோன்றிய Shelf Cloud.. பயத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்து போன பொதுமக்கள்!

இணையத்தில் வைரலாகும் கொரிலாவின் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் புற்களின் மீது அமர்ந்துக்கொண்டு இருக்கும் கொரிலாவை பெண் ஒருவர் புகைப்படம் எடுக்கிறார். அப்போது அந்த கொரிலா பெண்ணின் தலை முடியை பிடித்து இழுக்கிறது. அதனை பார்த்துக்கொண்டு இருந்த பெண் கொரிலா ஆண் கொரிலாவின் அருகில் வருகிறது. அப்போது ஆண் கொரிலா பெண்ணின் தலை முடியை விட்டதும் அந்த பெண் கொரிலா ஆண் கொரிலாவை தாக்குகிறது. அதனை கண்டு அங்கு புகைப்படம் எடுப்பதற்காக நின்றுக்கொண்டிருக்கும் நபர்கள் சிரிக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், எனது மனைவி தான் இப்படி என நினைத்தேன். ஆனால், உலகில் உள்ள அத்தனை பெண்களும் இப்படி தான் என்பது இப்போது புரிகிறது என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.