Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை மீட்ட வனத்துறை அதிகாரி – குவியும் பாராட்டு

Viral Wildlife Rescue Video : கேரளாவில் 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை பெண் வனத்துறை அதிகாரி பொறுமையுடனும் துணிச்சலாகவும் மீட்டார். இந்த பாம்பு பாதுகாப்பாக காட்டுக்குள் விடப்பட்டது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில் வனத்துறை அதிகாரியின் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Viral Video : 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை மீட்ட வனத்துறை அதிகாரி – குவியும் பாராட்டு
பாம்பை துணிச்சலாக மீட்ட வனத்துறை அதிகாரி
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 08 Jul 2025 00:21 AM

கேரளாவில் (Kerala) வனத்துறை அதிகாரியாக இருக்கும் ஜி.எஸ். ரோஷ்னி, தனது துணிச்சலாலும், பாம்பு பிடிக்கும் திறமையாலும் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளார். சமீபத்தில் அவர் 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை உயிருடன் மீட்டார். தற்போது அன்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓய்வுபெற்ற இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா, எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், பருத்திப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி (Forest Officer) ஜி.எஸ். ரோஷ்னி, ஒரு சில நிமிடங்களில்  ஓடையில் ஊர்ந்து செல்லும் ஆபத்தான விஷம் கொண்ட பாம்பைக் அசால்டாக பிடிப்பதைக் காணலாம்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பெப்பரா அருகே உள்ள வனப்பகுதிகளில் உள்ள ஒரு ஆற்றில் இருந்து ராஜ நாகம் ஒன்று காணப்பட்டிருக்கிறது. உள்ளூர்வாசிகள் அந்த ஆற்றில் அடிக்கடி குளித்து வருவது வழக்கம். அத்தகைய சூழ்நிலையில், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட அதிகாரி ரோஷ்னி உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார். விரைவாக செயல்பட்ட அவர், சில நிமிடங்களில், பாம்பை பிடித்து ஒரு பையில் அடைத்தார். பின்னர் அந்த பாம்பு காட்டுக்குள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கேயே விடப்பட்டது.

16 அடி நீளமுள்ள பாம்பு உயிருடன் மீட்ட ரோஷினியின் வீடியோ

 

ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ். சுஷாந்த் நந்தா இந்த வீடியோவைப் பகிர்ந்து வனத்துறை அதிகாரி காட்டிய துணிச்சலுக்கு எனது வணக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை மீட்ட கேரள வனத்துறையின் விரைவுப் பதிலளிப்பு குழுவில் ஜி.எஸ். ரோஷ்னியும் ஒருவர் என்று அவர் கூறினார்.

800க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்ட ரோஷ்னி

ஜி.எஸ். ரோஷ்னி ராஜ நாகம் போன்ற ஆபத்தான பாம்பைக் கையாள்வது இதுவே முதல் முறை என்றும், ஆனால் சில நிமிடங்களில் அதைப் பிடித்ததாகவும் அவர் கூறினார். சொல்லப்போனால், தனது எட்டு வருட வாழ்க்கையில், இதுவரை 800க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளார்.

ராஜ நாகப்பாம்பை மீட்கும் இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் அந்த பெண் அதிகாரியின் துணிச்சலையும் பொறுமையையும் பாராட்டி வருகின்றனர். ஒரு பயனர், “மிகவும் துணிச்சலான பெண்” என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர், வன அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் தான் தங்கள் வேலையை சரியாக செய்யும் உண்மையான நபர்கள் என்றார். மற்றொரு பயனர் பாம்பின் அளவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.