Viral Video : அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்.. வைரல் வீடியோ!
Man Handles Giant King Cobra | பாம்பு என்றாலே படையும் நடுங்கும். காரணம் பாம்புகள் மிக கொடிய விஷம் கொண்ட உயிரினங்கள். சாதாரண பாம்புகளே கொடிய விஷம் கொண்டவை என்றால், ராஜ நாகத்தை சொல்லவா வேண்டும். ஆனால், ஒருவர் ராட்ச தோற்றம் கொண்ட ராஜ நாகத்தை அசால்டாக கையாளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாம்புகள் விஷ தன்மை கொண்டவை என்பதால் அவற்றின் அருகில் செல்ல கூட பலர் யோசிப்பர். சாதாரண பாம்புகளுக்கே இந்த நிலை என்றால் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகத்துக்கு (King Cobra) சொல்லவா வேண்டும். ராஜ நாகத்தை பார்த்தால் படையே நடுங்கும். அத்தகைய அச்சுறுத்தும் தோற்றமும், நடையும் கொண்ட மிக கொடிய பாம்பு இனம் தான் அது. ஆனால், இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட ராட்ச ராஜ நாகத்தை அசால்டாக கையாளுகிறார். இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில், மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அச்சுற்றுத்தும் தோற்றம் கொண்ட ராஜ நாகத்தை அசால்டாக கையாளும் நபர்
வித்தியாசமான மற்றும் வியப்பூட்டும் வீடியோக்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகும். அந்த வகையில், ராட்ச மற்றும் அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட ராஜ நாகத்தை ஒருவர் தனது கையில் அசால்டாக பிடித்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம், கடித்த ஒரு சில நொடிகளிலேயே உயிரை எடுக்கும் அபாயம் கொண்டது. இதன் காரணமாக ராஜ நாகத்தை நூறு அடி தூரத்தில் பார்த்தால் கூட மனிதர்கள் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள். ஆனால், இந்த நபரோ மிகவும் கூலாக அந்த ராஜ நாகத்தை கையாளுகிறார். இது காண்போரை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தி வருகிறது.




இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ராட்ச தோற்றம் கொண்ட ராஜ நாகம் ஒன்றை ஒருவர் தனது கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறார். அப்போது அவர் இதுதான் மிகப்பெரிய ராஜ நாகம் என அந்த பாம்பு குறித்து விவரிக்கிறார். அப்போது அந்த பாம்பு தனது நாக்கை வெளியே நீட்டியபடி அங்கும் இங்கும் பார்க்கிறது. அதனை பார்ப்பதற்கே மிகவும் அச்சுறுத்தும் விதமாக உள்ளது. ஆனால், அந்த நபரோ மிகவும் கூலாக எந்த வித பயமும் இன்றி அந்த பாம்பை தனது கைகளில் பிடித்திருக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நீங்கள் அதனை கைகளால் பிடித்திருக்கிறீர்கள் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை என்று ஒருவரும், என் வாழ்வில் இத்தகைய செயலை நான் செய்யவே மாட்டேன் என்று ஒருவரும் என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.