Viral Video : கடற்கரையில் எழுந்த ராட்சத சுனாமி அலைகள்.. கடைசியில் ட்விஸ்ட்!
Cloud Formation Resembles Tsunami Waves | வானத்தில் வித விதமான வடிவங்களில் மேகங்கள் உருவாவது இயல்பான ஒன்றுதான். ஆனால், போர்ச்சுக்கலில் கடற்கரை ஓரத்தில் சுனாமி அலைகளை போல உருவான மேகத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

போர்ச்சுக்கலில் கடற்கரை பகுதியில் சுனாமி அலை போல் திரண்ட மேகங்களால் அங்கிருந்த பொதுமக்கள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த மேகங்களை பார்ப்பதற்கு சுனாமி அலை திரண்டு வருவதை போல் காட்சி அளித்த நிலையில், அங்கிருந்தவர்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து கடற்கரையில் இருந்த பொதுமக்கள் பதிவு செய்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுனாமி அலை போல் திரண்ட மேகங்கள்
பொதுவாக கடலில் சுனாமி வரபோகிறது என்றால் அதற்கு அலைகள் தான் முக்கிய எச்சரிக்கையாக இருக்கும். காரணம், சுனாமி வருவதற்கு முன்னதாக கடல் அலைகளின் வேகமும், அளவும் மிகப்பெரியதாக இருக்கும். சாதாரனமாக எழும் கடல் அலைகளை விடவும் சுனாமி கடல் அலைகள் மிகப்பெரிய சத்ததுடன் அச்சுறுத்தும் வகையில் கரையில் மோதும். இந்த நிலையில், போர்ச்சுக்கலில் உள்ள கடற்கரையில் சுனாமி அலை போல திரண்ட மேகங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
It was nuts to have experienced this rolling cloud in the north of Portugal. Felt like a tsunami out of a movie! 😂
Apparently it was 150km long, stretching from Figueira da Foz all the way up to Vila do Conde, which is close to where I was. pic.twitter.com/BOnr4knsJe— Helder (@HelderHP) June 30, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பொதுமக்கள் சிலர் கடற்கரையில் நேரத்தை செலவழித்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, கடற்கரைக்கு அருகே சுனாமில் அலை போல் மேகங்கள் உருவாகின்றன. அவற்றை பார்ப்பதற்கு அச்சு அசல் ராட்சத சுனாமி அலைகளை போல உள்ளன. அதனை பார்க்கும் பொதுமக்கள் அதை சுனாமி அலை எனவே நினைத்துவிடும் அளவுக்கு அவை இருந்தன.
ஆனால், அவை உண்மையில் சுனாமி அலைகள் இல்லை. அவை மேகங்கள் தான். கடற்கரை முழுவதும் சுனாமி அலை எழுவதை போல நீளமாக அந்த மேகங்கள் திரண்டுள்ளன. இதனை பார்த்து குழப்பத்தில் ஆழ்ந்துப்போன அந்த பொதுமக்கள் அவற்றை தங்களது ஸ்மார்போன்கள் மூலம் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.