Viral Video : இதுதான் உண்மையான நட்பு.. கண் தெரியாத பூனையுடன் விளையாடும் நாய் குட்டி.. வியக்கும் இணையவாசிகள்!
Blind Cat and Puppy's Viral Friendship | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வியக்கத்தக்க வீடியோக்கள் வெளியாகி நம்மை சிந்திக்க வைக்கும். அந்த வகையில் கண் தெரியாத பூனையுடன் நாய் குட்டி ஒன்று விளையாடும் வீடியோ வெளியாகி அன்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்த உலகத்தில் மிகவும் அழகான விஷயம் என்றால் அது அன்பு தான். ஒருவர் மீது மற்றொருவர் அன்பு செலுத்துவதை விடவும் உலகில் அழகான விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால், காலம் செல்ல செல்ல மனிதர்கள் மத்தியில் அன்பு, பாசம், கருணை ஆகிய குணங்கள் மெல்ல மெல்ல குறைந்து வருகின்றன. இது மனிதர்களை அவர்கள் தங்கள் இயல்பை மறக்க செய்கிறது. ஆனால், அவ்வப்போது நடக்கும் சில விஷயங்கள் மற்றும் சம்பவங்கள் அன்பு உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக உள்ளது. அந்த வகையில், கண்ணு தெரியாத பூனையுடம் நாய் குட்டி ஒன்று விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கண் தெரியாத பூனையுடன் விளையாடும் நாய் குட்டி
மனிதர்களை பொருத்தவரை பிறரை கேலி, கிண்டல் செய்யும் பழககம் பலருக்கும் உள்ளது. குறிப்பாக ஒருவரின் இயலாமையையும், ஊணத்தையும் கிண்டல் செய்யும் மிக மோசமான பழக்கத்தையும் சிலர் பின்பற்றுகின்றனர். அந்த வகையில் உடல்நல குறைபாடு கொண்ட நபர் ஒருவருக்கு உதவ கூட யோசிக்கின்றனர். ஆனால், தனது நண்பனான கண் தெரியாத பூனை ஒன்று மகிழ்ச்சியாக விளையாடும் வீடியோ வெளியாகி, சக மனிதர்கள் மீது அன்பும் அக்கறையும் கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.




இப்படி ஒரு நட்பா? – வைரல் வீடியோவை கண்டு வியக்கும் இணைய வாசிகள்
View this post on Instagram
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு நாயும், பூனை குட்டியும் விளையாடிக்கொண்டு இருக்கின்றன. அந்த பூனைக்கு கண்ணு தெரியாததால் அந்த நாய் குட்டி அதற்கு ஏற்றார் போல் விளையாடுகிறது. அதாவது வீட்டின் படிக்கட்டை சுற்றி அவை விளையாடுகின்றன. அப்போது அதனை சுற்றி வரும்போது பூனை, நாய் குட்டி எங்கே என தெரியாமல் அப்படியே இருக்கும் இடத்தில் அமர்ந்துக்கொள்கிறது. உடனே நாய் குட்டி பூனையில் அருகில் வந்து சத்தமிடுகிறது. உடனடியாக மீண்டும் பூனை நாய் குட்டியை துரத்தி விளையாடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : நூதன முறையில் அழுகிய பழங்களை ஏமாற்றி விற்கும் கடைக்காரர் – வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது, இதுதான் உலகின் மிகச் சிறந்த நட்பு என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.