Viral Video : மனிதர்களை போல இரண்டு கால்களில் நின்று இரையை நோட்டமிட்ட சிறுத்தை.. வைரல் வீடியோ!
Leopard Stands on Two Legs | சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் இரையை வேட்டையாடி சாப்பிடும். அவ்வாறு சிறுத்தை ஒன்று இரையை வேட்டையாடுவதற்காக காத்துக்கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த சிறுத்தை மற்ற சிறுத்தைகளை போல் இல்லாமல் மனிதர்களை போல் இரண்டு கால்களில் நின்றுக்கொண்டு வேட்டையாடுகிறது.

உலகில் எந்த மூலையில் அசாத்தியமான அல்லது ஆச்சர்யமூட்டும் சம்பவங்கள் நடைபெற்றாலும் அது உலகிற்கு மிக எளிதாக தெரிய வந்துவிடும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இது சாத்தியமாகிறது. அதாவது, ஏதேனும் அசாத்தியமான விஷயங்களை காணும் பொதுமக்கள் உடனடியாக அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டு விடுகின்றனர். இதன் மூலம் உலகின் எந்த மூலையில், என்ன நடந்தாலும் அது மிக விரைவாகவும், எளிதாகவும் உலகிற்கு தெரிய வந்துவிடுகிறது. அந்த வகையில், சிறுத்தை ஒன்று இரண்டு கால்களில் மனிதர்களை போல நின்றுக்கொண்டு வேட்டையாடுவதற்கு நோட்டமிடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மனிதர்களை போல இரண்டு கால்களில் நின்று வேட்டையாட நோட்டமிட்ட சிறுத்தை
சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் இரையை பதுங்கியிருந்து வேட்டையாடும் தன்மை கொண்டவை. புதர்கள், செடிகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் இந்த விலங்குகள் உரிய நேரம் பார்த்து இரையை வேட்டையாடும். அதற்கு முன்னதாக சரியான நேரம் வரும் வரை மிகவும் அமைதியாக காத்திருக்கும். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் இரையை வேட்டையாடுவதற்காக சிறுத்தை ஒன்று காத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், மற்ற சிறுத்தைகளை போல் இல்லாமல் அந்த சிறுத்தை மனிதர்களை போல இரண்டு கால்களில் நின்றுக்கொண்டு இருக்கிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இணையத்தில் வைரலாகும் சிறுத்தையின் வீடியோ
That leopard is looking at his food by standing on two legs. Leopards are one of the most versatile creatures on earth. From Kruger. pic.twitter.com/tNG74rt9R8
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 12, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று சாலையில் நின்றுக்கொண்டு இருக்கிறது. அப்போது அது வேட்டையாடுவதற்காக இரையை நோட்டமிடுகிறது. இரையை நோட்டமிடும் அந்த சிறுத்தை மற்ற சிறுத்தைகளை போல் இல்லாமல் மனிதர்களை போல இரண்டு கால்களில் நின்றுக்கொண்டு நோட்டமிடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : திடீரென வானத்தில் தோன்றிய Shelf Cloud.. பயத்திலும், குழப்பத்திலும் ஆழ்ந்து போன பொதுமக்கள்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து கூறியுள்ள பயனர் ஒருவர், விலங்குகளால் மனிதர்கள் செய்ய கூடிய அனைத்தையும் செய்ய முடியும். அவை வரிசெலுத்துவதில் இருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறு இருக்கின்றன என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.