நூதன முறையில் அழுகிய பழங்களை ஏமாற்றி விற்கும் கடைக்காரர் – வைரலாகும் வீடியோ!
Rotten Fruit Scam Exposed : சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில் பழக்கடைக்காரர் வாடிக்கையாளரை நூதன முறையில் ஏமாற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவில் கடைக்காரர் ஏற்கனவே தராசில் அழுகிய பழங்களை வைத்திருக்கிறார். வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் பழங்களோடு அவற்றையும் எடைபோட்டு அவருக்க விற்கிறார்.

டெல்லியில் (Delhi) உள்ள உத்தம் நகர் மெட்ரோ நிலையத்தின் வெளியே அழுகிய பழங்களை ஏமாற்றி விற்கும் கடைக்காரரின் வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. இந்த காணொளி @thebhagwaman என்ற இன்ஸ்டாகிராம் (Instagram)கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது, இதற்காக அந்த கடைக்காரர் புதிய யுக்தியை பயன்படுத்துகிறார். வாடிக்கையாளரின் அறியமையை பயன்படுத்தி அவர் அழுகிய பழங்களை விற்கிறார். இந்த வீடியோ இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் கடைக்காரர் அழுகிய பழங்களை விற்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன இது நெட்டிசன்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வீடியோவில் கடைக்காரர் மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு செயலை செய்கிறார். அவர் இரண்டு அழுகிய மாம்பழங்களை தராசில் வைத்திருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. இதற்குப் பிறகு, வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த மாம்பழங்களை அவர் கவனிக்காத நேரம் பார்த்து, அந்த மோசமான மாம்பழங்களின் மேல் வைத்து அவற்றை எடை போடுகிறார்.




இதையும் படிக்க: இந்திய வியாபாரியிடம் ரூ.50 குறைத்து பேரம் பேசும் வெளிநாட்டவர் – ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்
வாடிக்கையாளரை ஏமாற்றும் கடைக்காரரின் வீடியோ வைரல்
View this post on Instagram
இதன் காரணமாக, வாடிக்கையாளர் தான் சரியாக எடைபோட்டு புதிய பழங்களைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார். ஆனால் உண்மையில் கடைக்காரர் அவரை ஏமாற்றிவிட்டார். கடைக்காரரின் செயல் நெட்டிஷன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாம் தெளிவாக இல்லையென்றால் இப்படி ஏமாறக் கூடும். இனி கடைகளில் பொருட்களை வாங்கும் போது கவனமுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் மக்கள் சாலையோர கடைசிகளில் பொருட்கள் வாங்கவே தயங்குவர். இது நேர்மையாக வியாபரம் செய்யும் மற்ற கடைக்காரர்களையும் பாதிக்கும்.
இதையும் படிக்க: விமானத்தில் லைஃப் ஜாக்கெட்டை திருடிய பயணி.. கையும் களவுமாக பிடித்த விமான ஊழியர்!
நெட்டிஷன்கள் கண்டனம்
இந்த நிலையில் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்ததும் நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர். பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர், மேலும் தாங்களும் இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாகிவிட்டதாகக் கூறினர். இது குறித்து ஒரு பயனர், வாடிக்கையாளர் எல்லா பழங்களும் நன்றாக தேர்ந்தெடுக்கிறார். ஆனால் பிறகு இந்த மோசமான பழங்கள் எங்கிருந்து வந்தன என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இதுபோன்ற சம்பவம் எனக்கு இரண்டு முறை நடந்துள்ளது, ஆனால் இப்போது நான் எச்சரிக்கையாகவே பொருட்களை வாங்குகிறேன் என்றார். மற்றொரு பயனர் உத்தம் நகரில் இதுபோன்று அடிக்கடி நடப்பதாகவும் இனி அங்கிருந்து பொருட்களை வாங்காமல் இருப்பது நல்லது , ஏனென்றால் இங்குள்ள அனைத்து விற்பனையாளர்களும் அத்தகைய மோசடி செய்பவர்கள் என கமெண்ட் செய்துள்ளார்.