Viral Video : நடைபாதையில் கிடந்த குப்பை.. பொறுப்பாக எடுத்து குப்பை தொட்டியில் போட்ட யானை குட்டி!
Baby Elephant's Civic Duty | என்னதான் பொது இடங்களில் ஏராளமான குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான பொதுமக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவதே இல்லை. அவர்கள் சமூக பொறுப்பற்று சாலைகளில் வீசி செல்கின்றனர். இந்த நிலையில், யானை குட்டி ஒன்று நடைபாதையில் கிடந்த குப்பையை குப்பை தொட்டியில் வீசும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட்போன் மற்றும் இணையதளம் மூலம் ஒவ்வொரு நாளும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களில் சில சிரிக்க வைக்கும் விதமாக இருந்தாலும் சில வீடியோக்கள் நம்மை சிந்திக்க வைக்கும். அந்த வகையில் யானை குட்டி ஒன்று நடை பாதையில் கிடந்த குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
நடை பாதையில் கிடந்த குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போட்ட யானை குட்டி
யானைகள் மிகவும் குறும்புத்தனம் மிக்க உயிரினம் என்பதால் அவை செய்யும் சில அழகான விஷயங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், யானை குட்டி ஒன்று தனது தாயுடன் நடந்துச் செல்லும்போது நடைபாதையில் கிடந்த குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகும் நிலையில், இணையத்தில் தற்போது பிரபலமாக உள்ளது.




இதையும் படிங்க : Viral Video : கழுத்து வரை கரை புரண்டு ஓடிய வெள்ளம்.. மூழ்கும் நிலையில் நேரலை செய்த செய்தியாளர்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் யானை குட்டியின் வீடியோ
If Chotu can,
We all can 🥰High time we learn these civic sense to keep our surroundings neat & tidy. pic.twitter.com/x54URSMiq6
— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) July 21, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் யானை குட்டி ஒன்று தனது தாயுடன் நடைபாதையில் நடந்துச் செல்கிறது. அந்த வழியில் குப்பை தொட்டி இருக்கும் நிலையில், அதற்கு அருகே குப்பை ஒன்று உள்ளது. அதனை பார்த்த குட்டி யானை, குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனத்துறை அதிகாரி ஒருவர் சோட்டுவால் முடியும் என்றால் நம்மாலும் முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : கையில் பாம்புகளை பிடித்துக்கொண்டு ஊர்வலம் சென்ற ஆண்கள்.. பீகாரில் வினோத சம்பவம்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். விலங்குகளுக்கே சுற்றுசூழல் குறித்து இவ்வளவு அக்கறை உள்ள நிலையில், நமக்கு ஏன் இருக்க கூடாது என பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.