சிறுமியுடன் எடுத்த செல்ஃபியை ஸ்டேட்டசில் வைத்த இளைஞர்.. கொலைவெறி தாக்குதல் நடத்திய சிறுமியின் அண்ணன்!
Karnataka Teen Brutally Beaten | கர்நாடகாவை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் 18 வயது நிறைவடையாத சிறுமி ஒருவருடன் புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன், இளைஞரை கல்லூரியில் வைத்து மிக கடுமையாக தாக்கியுள்ளார்.

பெல்லாரி, ஆகஸ்ட் 04 : கர்நாடகாவில் (Karnataka) 18 வயது நிரம்பாத சிறுமியுடன் எடுத்த செஃல்பி புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்ததற்காக ஐடிஐ படித்து வரும் மாணவர் மிக கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய்யுள்ளது. சிறுமியின் புகைப்படத்தை ஸ்டேட்டசில் வைத்ததால் ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன், தனது நண்பர்களுடன் சென்று இளைஞரை மிக கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கையின் புகைப்படத்தை ஸ்டேட்டசில் வைத்ததால் அண்ணன் வெறிச்செயல்
கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயதான தொட்ட பசவா. இவர் கல்லூரியில் ஐடிஐ படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 18 வயது நிரம்பாத சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுமியுடன் சேர்ந்து அவர் செல்ஃபி புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார். அதனை அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் அண்ணனுக்கு தெரிய வரவே அவர் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.
இதையும் படிங்க : ஜிம்மில் திடீர் மாரடைப்பு.. சுருண்ட விழுந்து உயிரிழந்த நபர்.. அதிர்ச்சி வீடியோ
10 பேர் கொண்ட கும்பலுடன் சென்று இளைஞரை தாக்கிய சிறுமியின் அண்ணன்
இதன் காரணமாக தொட்ட பசவா படிக்கும் ஐடிஐ கல்லூரிக்கு தனது நண்பர்களுடன் சென்ற அவர், அங்கு மைதானத்தில் வைத்து தொட்ட வசவாவிடம் தனது தங்கையின் புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் வைத்தது குறித்து அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் இருவருக்கும் இடையே பெரும் சண்டையாக மாறி உள்ளது. இந்த நிலையில், ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன் மற்றும் அவருடன் சென்ற 10 பேர் சேர்ந்து தொட்ட பசவாவை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இரும்பு கம்பி, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை வைத்து அவர்கள் அவரை மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க : சிறுவன் கடத்தப்பட்டு கொலை.. ரூ.5 லட்சம் தராததால் ஆத்திரம்.. அதிர்ந்த பெங்களூரு!
10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
என்னை விட்டு விடுங்கள் என தொட்ட பசவா காலில் விழுந்து கெஞ்சியும் விடாது தாக்கிய அந்த கும்பல், அவரை நிலைகுலைய செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் அண்ணன் மற்றும் அவரது நண்பரகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தொட்ட பசவாவை 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.