ஆபரேஷன் மகாதேவ்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..
Operation Mahadev: தேடுதல் வேட்டையின் பொழுது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. ஹர்வானின் முள்னார் பகுதியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற தகவலின் பெயரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்ரீநகர், ஜூலை 28, 2025: ஸ்ரீ நகரிலுள்ள டச்சிகாம் தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள ஹர்வான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக நம்பப்படும் மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஸ்ரீ நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளது. ஆப்பரேஷன் மகாதேவ் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
26 மக்களை கொன்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவல்களின் பெயரில் ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள டச்சிகாம் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள ஹர்வான் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் கூட்டு குழு சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது.
ஆபரேஷன் மகாதேவ்:
OP MAHADEV
Contact established in General Area Lidwas. Operation in progress.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/xSjEegVxra
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) July 28, 2025
இந்த தேடுதல் வேட்டையின் பொழுது பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. ஹர்வானின் முள்னார் பகுதியில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்ற தகவலின் பெயரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: எனது கடின உழைப்பு வீண்! மிஸ் ஆன முதல்வர் பதவி.. வருத்ததுடன் பேசிய மல்லிகார்ஜூன கார்கே!
தேடுதலின் போது தூரத்திலிருந்து 2 சுற்று துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டதாகவும், இது படைகள் தங்கள் சோதனை நடவடிக்கைகளை தீவிர படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பிக்கும் முயற்சிகளை தடுக்க அப்பகுதியில் துப்பாகிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை