வருமான வரி மசோதாவை திரும்ப பெற்ற மத்திய அரசு – காரணம் என்ன?
Govt Withdraws Tax Bill : கடந்த பிப்ரவரி 13, 2025 அன்று தாக்கல் செய்த புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. திருத்தங்களுடன் கூடி புதிய மசோதா ஆகஸ்ட் 11, 2025 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2025, பிப்ரவரி 13 ஆம் தேதி புதிய வருமானவரி மசோதாவை (Income Tax Bill) மத்திய அரசு மக்களைவையில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் அதில் உள்ள பிழைகள், பொருத்தமற்ற சொற்கள் காரணமாக வருமானவரி மசோதாவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் பைஜெயந்த் பாண்டாவின் தலைமையிலான தேர்வு குழுவின் பரிந்துரையின் பெயரில் மாற்றியமைக்கப்பட்ட புதிய வருமானவரி மசோதா வருகிற ஆகஸ்ட் 11, 2025 அன்று மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வருமானவரி மசோதாவை புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களை களைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது.
மத்திய அரசு 1961 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக கடந்த பிப்ரவரி 13, 2025 அன்று புதிதாக வருமான வரி மசோதாவை தாக்கல் செய்திருந்தது. வருமான வரி செலுத்தும் முறையை எளிமையாக்க இந்த நடைமுறை கொண்டுவரப்படவுள்ளதாக மத்திய அரசு இதனை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த மசோதாவை புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இத்தைகைய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நிதி அமைச்சகத்தின் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : கல்வான் தாக்குதலுக்கு பிறகு, முதன்முறையாக சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி




திரும்பப்பெறப்பட்ட காரணம்
இதுகுறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இதுதொடர்பாக பேசிய போது, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவில் சில வார்த்தைகளினால் குழப்பங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து சரியான அர்த்தத்தை வழங்க சில திருத்தங்கள் அவசியம். சில சொற்றொடர்களுக்கு திருத்தம் அவசியம். விரைவில் புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் என்றார்.
இதையும் படிக்க : கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டிய டிரம்ப்.. விளக்கம் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா!
தேர்வு குழுவின் முக்கிய பரிந்துரைகள்
பைஜெயந்த் பாண்டாவின் தலைமையிலான தேர்வு குழுவின் பரிந்துரையின் படி சில வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக in normal course நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேலும் Deemed Rent என்ற விதி சேர்க்கப்பட தேர்வு குழு பரிந்துரைத்திருக்கிறது. 30 சதவிகிதம் நிலையான கழிவு (Standard Deduction) கணக்கிடும்போது , நகராட்சி வரி கழித்த பின் மதிப்பீடு செய்ய வேண்டும். ஒய்வூதியம் பெறாதவர்களுக்கு Income from other sources பிரிவில் கழிவுகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Occupied என்ற வார்த்தையை as he may ocupay என மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல வார்த்தைகளை எளிதில் புரிந்துகொள்ளும்படி மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் 23 அத்தியாயங்கள், 536 பிரிவுகள், 16 அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன. வருமான வரி வதிகளை எளிமையாக்குதல், தேய்மானம் (Depreciation) கணக்கீட்டு முறைகளை எளிமைப்படுத்துதல் போன்ற பல திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.