Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vice President Election Date: துணை ஜனாதிபதி தேர்தல்.. தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!

Election Commission : துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் 2025 செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Vice President Election Date: துணை ஜனாதிபதி தேர்தல்.. தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!
துணை ஜனாதிபதி தேர்தல்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Aug 2025 13:57 PM

டெல்லி, ஆகஸ்ட் 01 : துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் (Vice President Election) 2025 செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) ராஜினாமா செய்த நிலையில், தற்போது துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜக்தீப் தன்கர். இவர் 2025 ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இரண்டாவது நாளிலேயே அவர் இந்த முடிவை எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்வே அவர் ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 10, 2027 அன்று முடிவடைய இருந்தது.

ஆனால் அதற்கு முன்பாகவே, தனது உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார். இதனை அடுத்து, தற்போது அந்த பதவி காலியாக உள்ளது. தற்போது ராஜ்சயபாவை அதன் துணைத் தலைவர் ஹர்வன்ஸ் வழிநடத்துகிறார். எனவே, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு அரசியலப்பு சட்டத்தின்படி, 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இந்த நிலையில், தற்போது துணை ஜனாதிபதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Also Read : ‘இந்தியாவுக்கு முழு உலகத்தின் ஆதரவு கிடைத்தது’ – ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய பிரதமர் மோடி

துணை ஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு

அதன்படி, துணை ஜனாதிபதி தேர்தல் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்று, அன்றயை தினனே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 2025 ஆகஸ்ட் 21ஆம் தேதியாகும். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 2025 ஆகஸ்ட் 23ஆம் தேதியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Also Read : ‘டிரம்ப் பொய்யர் என நாடாளுமன்றத்தில் கூறுவீர்களா?’ மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி!

துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது எப்படி?

அரசியலமைப்பின் பிரிவு 66(1) இன் படி, குடியரசு துணைத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களை கொண்ட தேர்தல் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க மாநிலங்களவையின் உறுப்பினர்கள் மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் மறைமுகமாக நடத்தப்படும். விகிதாசாரப் பிரிதிநிதித்துவ அடிப்படையில், இந்த தேர்தல் நடைபெறும்.  ஒருமுறை மட்டுமே ஒருவர் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.