Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Operation Sindoor : மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் – அமைதியாக இருந்த ராகுல் காந்தியால் சர்ச்சை!

Rahul's Silent Gesture : ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்போது இந்திய வீரர்களின் வீர தீர செயல்களை பாராட்டும் விதமாக கைத்தட்டுமாறு எம்பிக்களை கேட்டுக்கொண்டார். அப்போது ராகுல் காந்தி அமைதியாக அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Operation Sindoor : மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் – அமைதியாக இருந்த ராகுல் காந்தியால் சர்ச்சை!
ராஜ்நாத் சிங் - ராகுல் காந்தி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Jul 2025 20:23 PM

டெல்லி, ஜூலை 28:  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் (Pahalgam ) ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து மே 6, 7 தேதிகளில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) குறித்து இன்றும், நாளையும் (ஜூலை 29) மக்களவையில் ஒட்டுமொத்தமாக 16 மணி நேர விவாதம் நடத்தப்படுகிறது. மக்களவையில் ஜூலை 28, 2025 அன்று பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், இந்திய ராணுவம் தனது இலக்குகளை வெற்றிகரமாக அடைந்த பிறகே தாக்குதல் நிறைவு பெற்றது.யாரின் அழுத்தத்தாலும் தாக்குதலை நிறுத்தவில்லை என்றார்.

அப்போது இந்திய ராணுவ வீரர்களின் வீர தீர செயலைப் பாராட்டி கைத்தட்டுமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இந்திய வீரர்களின் செயல்பாடுகளுக்கு மற்ற எம்பிகள் மேஜையில் தட்டி பாராட்டு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைதியாக அமர்ந்திருந்தார்.  இந்த நிகழ்வைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், இது தேசத்திற்கு துரோகமாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க : நமது இலக்கை எட்டியதால் தாக்குதலை நிறுத்தினோம்.. ராஜ்நாத் சிங் விளக்கம்!

ராகுல் காந்தியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்

இதையும் படிக்க : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர்.. நாடாளுமன்றத்தில் இன்று முதல் விவாதம்..

பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எப்படி நுழந்தனர் என கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள்

மக்களவையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் பேசியதாவது, “ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விரிவாக பேசினார். ஆனால், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்திய எல்லையை எவ்வாறு மீறி பஹல்காமில் ஊடுருவினர் என்பதைப் பற்றி அவர் ஏன் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை?” என்றார். மேலும் “எல்லைப் பாதுகாப்பு குறித்து மக்கள் மனதில் ஏற்கனவே கேள்விகள் உள்ளன. இந்நிலையில், பயங்கரவாதிகள் எந்த வழியாக நுழைந்தனர், அந்த குறைபாடுகள் எங்கு உள்ளன என்பதைக் குறிப்பிடாமல் வெறும் ஆபரேஷன் வெற்றி குறித்து மட்டும் பேசுவது ஏன்?” என கேள்வி எழுப்பினார். “இந்தியாவின் பாதுகாப்பு முக்கியம் என்பதில் மாற்றமில்லை. ஆனால் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் எவ்வாறு நம் மண்ணில் நுழைய முடிந்தது என்பதை அரசுக்கு மக்கள் முன்பு விளக்க வேண்டிய பொறுப்பு உள்ளது” எனவும் அவர் வலியுறுத்தினார்.